வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் ரெஜினா. இவர் தமிழில் 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார். அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா,  மாநகரம் , சரவணன் இருக்க பயமே, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு  சினிமாத்துறையில் நடக்கும் casting couch  குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார் ரெஜினா.






 



அதில் ” ஒருமுறை எனக்கு அந்த அனுபவம் இருக்கு. ஒருத்தர் அட்ஜெஸ்மெண்ட் பண்ணுவீங்களானு ஃபோன்ல கேட்டாங்க . எனக்கு 20 வயது இருக்கும். நான் மேனேஜர்தான் பேசுவாங்கன்னு சொல்லிட்டு இருந்தேன். அதன் பிறகு மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுதுதான் எனக்கு புரிந்தது. அவர் வேறு கோணத்தில் கேட்கிறார் என்று. அதன் பிறகு நான் காலை கட் பண்ணிட்டேன். அதற்கு பிறகு எனக்கு இப்படியான அனுபவங்கள் இல்லை. நான் நிச்சயமாக சொல்லுவேன் . பெண்கள் இதை ஃபேஸ் பண்ணுட்டுதான் இருக்காங்க. அதுல சில உண்மையாகவும் இருக்கும் , சிலவை பொய்யாகவும் இருக்கும். ஏன்னா நிறைய பேர் சிம்பதியை ஏற்படுத்தனும் என்பதற்காக பொய் கதையும் சொல்லுவாங்க. இது சினிமாவுல மட்டும்தான் இருக்குனு இல்லை. எல்லா இடங்கள்லயும் இருக்கும் . சூப்பர் மார்கெட் போனா கூட  அங்க வேலை பார்க்கும் பெண்களும் இதே மாதிரியான கதைகளை சொல்லுவாங்க.


நான் காலேஜ் படிக்கும் போது , ஈகா தியேட்டர் போற வழியில ஒரு நாள் யாரோ ஒரு நபர் எனது உதட்டை  பிடிச்சி இழுந்துட்டு சாதாரணமாக கடந்து போனார். இப்படியான உலகத்துல இருக்கோம். முன்பெல்லாம் மேனேஜர்ஸ்தான் இருப்பாங்க. இப்போ நிறைய ஏஜென்ஸி இருக்கு. அதன் மூலமா நடிக்க வரலாம் . எனக்கு மோசமான அனுபவம் நடந்தது கிடையாது” என வெளிப்படையாக பேசியுள்ளார் ரெஜினா.