Ajith : அஜித் சார் மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததில்லை...விடாமுயற்சி பற்றி நடிகை ரெஜினா கஸான்ட்ரா

மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் பற்றி நடிகை ரெஜினா கஸாண்ட்ரா அப்டேட் கொடுத்துள்ளார்

Continues below advertisement

விடாமுயற்சி

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தை ரசிகரகள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜூன் , த்ரிஷா , ஆரவ் , ரெஜினா கஸான்ட்ரா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கியது. பின் பல காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு சில மாதங்கள் முன்பு படப்பிடிப்பு முடிவடைந்தது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. விடாமுயற்சி படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ரெஜினா கஸாண்ட்ரா தனது அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Continues below advertisement

விடாமுயற்சி பற்றி ரெஜினா

" விடாமுயற்சி திரைப்படம் மிக சிறப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன் எனக்கு அஜித் சாரை எனக்கு தெரியாது. ஆனால் இந்த படத்திற்கு பின் அஜித் சாரை எல்லாரும் சந்திக்க வேண்டும் என்று சொல்வேன். நான் சந்தித்த எந்த ஒரு மனிதரைவிடவும்  இல்லாத ஒரு ஈர்ப்பு அஜித்திடம் இருக்கிறது. இந்த படம் வெளியாக வேண்டும் என்பதில் அவர் ரொம்ப கவனமாக இருந்து வருகிறார். இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. மகிழ் திருமேணி இப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நான் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தை என்மேல் நம்பிக்கை வைத்து படக்குழு எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாவதற்கு நான் ரொம்ப ஆர்வமாக காத்திருக்கிறேன்" என ரெஜினா தெரிவித்துள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola