ராஷ்மிகா மந்தனா
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்கிற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அப்படத்தில் நடித்த நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமண நிச்சயமும் நடந்தது. அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த காதல் ஜோடி திடீரென்று பிரிந்தது. தற்போது தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக உருவெடுத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. குறைந்த காலத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் டியர் காம்ரேட் , புஷ்பா தமிழில் சர்தார் , வாரிசு , இந்தியில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் என ராஷ்மிகா நடித்த படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனையை படைத்து வருகின்றன. அடுத்தபடியாக தனுஷின் குபேரா , புஷ்பா 2 என இவர் நடித்துள்ள படங்கள் ரிலீஸூக்கு காத்திருக்கின்றன.
விஜய் தேவரகொண்டாவுடன் காதல்
ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சேர்ந்து சுற்றுலா செல்வது , பண்டிகைகளை ஒன்றாக கொண்டாவது , சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். ஆனால் தங்கள் காதல் பற்றி இதுவரை வெளிப்படையாக இருவரும் பேசியதில்லை. சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தான் சிங்கிள் இல்லை என்று முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்தார். தற்போது மீண்டும் ஒரு முறை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சேர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தேவரகொண்டா கேமராவில் தெளிவாக தெரிய ராஷ்மிகா மந்தனா கேமராவிடம் இருந்து முகம் தெரியாதபடி உட்கார்ந்திருக்கிறார். ஆனால் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே காஸ்டியூமில் வெளியிட்டுள்ள புகைப்படம் விஜய் தேவரகொண்டாவுடன் இருப்பது இவர்தான் என உறுதிபடுத்தியுள்ளது. இருவரும் கூடிய சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அப்போது தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.