நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் உறவினரான ரம்யா பாண்டியன், ஜோக்கர் படத்தில் அறியப்பட்டார். அதன் பின் பெரிய வாய்ப்புகள் வராமல் போக, இடுப்பு தெரிய நகை அணிந்து அதன் மூலம் பிரபலமாக பேசப்பட்டார். திடீர் வைரல் ஆனார். அந்த வெளிச்சத்தில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரம்யா பாண்டியன், அங்கு நீண்ட நாட்கள் போட்டியில் பங்கேற்றார். 


ஆனால், பிக்பாஸ் சென்ற பின், பெரிய சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அதுமாதிரியான எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற ரம்யாவிற்கு, சினிமா வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.






பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு பெரிய வாய்ப்பை தரவில்லை என்பதை விட, இருந்த தனது இமேஜ்ஜையும் டேமேஜ் செய்து விட்டதை உணர்ந்தார் ரம்யா பாண்டியன். சரி, விட்ட இடத்திலிருந்து தொடருவதை விட, தொடங்கிய இடத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தார். மீண்டும் கிளாமர் போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்தார்.






 அதற்காக கவர்ச்சியை கொஞ்சம் அல்ல, நிறைய தூக்கலாக போட்டு, கடந்த சில போட்டோக்களை இறக்குமதி செய்தார். அவ்வளவு தான், அவை தற்போது வைரலாக பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அந்த கிளுகிளு போட்டோக்கள் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து எடுக்கப்பட்ட முழு வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார் ரம்யா. 


இதற்கு முன் வெளியிட்ட போட்டோக்களை விட இந்த வீடியோ இன்னும் கிளாமராகவும், ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவும் இருப்பதால், இந்த முயற்சி தனக்கு இன்னும் பெரிய அளவில் வாய்ப்புகளை தரும் என ரம்யா நம்புகிறார். பார்க்கலாம், வாய்ப்புகள் மீண்டும் வருகிறதா என்று!