தமிழில் ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து மொட்டை மாடியில் இவர் எடுத்த கவர்ச்சிப்படங்கள் இவரை பிரபலமாக்கியது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸில் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். அத்துடன் சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் 3-ம் இடம் பிடித்தார்.
தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ரம்யா பாண்டியன் கருப்பு உடை அணிந்து மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ஹிர்தயம் படத்தின் உள்ள தர்சனா பாடலை ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்