ரம்யா பாண்டியன் திருமணம்


நடிகை ரம்யா பாண்டியன் மற்றும்  பிரபல யோகா பயிற்சியாளர் லொவெல் தவான் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம்  நடைபெற்றுள்ளது.

Continues below advertisement


தமிழில்  ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து மொட்டை மாடியில் இவர் எடுத்த கவர்ச்சிப்படங்கள் இவரை  பிரபலமாக்கியது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸில் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.   மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியும் இவருக்கு ரசிகர்களிடம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்று தந்தது. 


யோகா பயிற்சியாளரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பாண்டியன்


கடந்த 2023 ஆம் ஆண்டு ரவி ஷங்கர் ஆசிரமத்தில் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் இணைந்தார். இந்த ஆசிரமத்தில் அவரது பயிற்சியாளராக வந்தவர் தான் லொவல் தவான். இருவருக்கும் பார்த்த உடனே பிடித்து காதலில் விழுந்ததாகவும்  தங்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள்  வெளியாகின. பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட லவல் தவான் ஒரு பிரபல யோகா பயிற்சியாளர். இது தவிர்த்து ஒரு தொழிலதிபரும் கூட. அதே நேரம் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர் ரம்யா பாணியன். இருவருக்கும் இன்று ரிஷிகேஷில் சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. திருமணம் ரிஷிகேஷில் நடைபெற்றாலும் வரும் நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்