ரம்பா :


90 களில் இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ‘ரம்பா’. 1993 ஆம் ஆண்டு வெளியான உழவன் திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்ததாக மூன்று வருட இடைவெளியில்  வெளியான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் ரம்பாவிற்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் ஒப்பந்தமான ரம்பாவை தயாரிப்பாளர்கள் லக்கி சார்ம் என கொண்டாடினார்கள்.







ஐட்டம் நம்பர்ஸ்:


தமிழ் சினிமா எத்தனை பரிணாமங்களை எடுத்திருந்தாலும் எக்காலத்திலும் மாற்றம் காணாத ஸ்டீரியோ டைப்பாக இருப்பது இந்த ஐடம் நம்பர் பாடல்கள்தான். ஹீரோயின்கள் மார்கெட்டை இழந்தால் அவர்கள் சில முக்கிய நடிகர்களின் படங்களில் குத்து பாடலில் நடனமாடுவதும் வழக்கமான ஒன்றுதான். 15 வருடம் வெற்றிகரமான  ஹீரோயின் மெட்டீரியலாக இருந்த ரம்பா தமிழ் , தெலுங்கு படங்களில் ஐட்டம் நம்பரில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியிருந்தார். இது குறித்து பேசிய ரம்பா “ நான் சுக்கிரன் படத்தில் ஒரு ஐட்டம் நம்பரில் ஆடியிருந்தேன். விஜய் கூட நடனமாட கேட்கும் பொழுது என்னால் முடியாது என சொல்ல முடியவில்லை . பாட்டில் நடன இயக்குநர்கள் அவர்கள் விருப்பப்படி செய்ய சொல்வார்கள் . அந்த பாட்டிலும் அப்படிதான் மதுபான பாட்டிலை கையில் வைத்திருக்கும்படி கூறினார்கள் எனக்கு பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் இயக்குநர் சந்திரசேகர் சார் வேண்டாம் , நீங்க தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ளுங்கள் என கொடுத்தார். இப்போ அது சகஜமாக இருந்தாலும் அப்போ எனக்கு சில கட்டுப்பாடுகளை நானே வைத்திருந்தேன்.அதன் பிறகு சரத்குமார் சாருடன் ஒரு பாடல் பண்ணினேன். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி , அல்லு அர்ஜூன் உள்ளிட்டவர்களுடனும் நடித்தேன். காரணம் அவங்க குடும்பம் மாதிரி அதனால என்னால முடியாதுனு சொல்ல முடியவில்லை “ என தெரிவித்துள்ளார்.







திருமணத்திற்கு பிறகு :


ரம்பா இலங்கை தமிழர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குழந்தைகள் , குடும்பம் என படு பிஸியாக இருக்கும் ரம்பா இன்ஸ்டாகிராமிலும் செம ஆக்டிவ் . அவ்வபோது  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும்  பங்கேற்று வருகிறார்.