‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து நடிகை ரக்‌ஷிதா விலகியுள்ளார். திரைப்படத்தில் நடித்து வருவதாக அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலும் ஒன்று. மற்ற சீரியல்களுக்கு உள்ளது போலவே, இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். குறிப்பாக சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரக்‌ஷிதாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மகா என்ற கேரக்டரில் ரக்‌ஷிதா நடித்து வருகிறார்.


இந்த நிலையில், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து நடிகை ரக்‌ஷிதா விலக உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘பாய் பாய் மகா’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. அவரின் இந்த அறிவிப்பு ரசிர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




முன்னதாக, கன்னட படம் ஒன்றில் ஒப்பந்தமாகி வரும் நடித்து வரும் ரக்‌ஷிதா, இந்த படத்திற்காக  ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து விலக உள்ளார் என்று கூறப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அதற்கு சீரியலின் இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சமீபகாலமாக விஜய் டிவி சீரியல்களில் நடித்த நடிகைகள் சில காரணங்களுக்காக சீரியல்களில் விலகுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவர்கள் இந்த முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது. 


சமீபத்தில் அதே விஜய் டிவியில் புகழ்பெற்ற சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணாம்மாவாக நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகுவதாக வந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தன. 


மாடலிங்கிலிருந்து டிவிக்கு வந்த ரோஷினிக்கு ’பாரதி கண்ணம்மா’தான் முதல் சீரியல். பிரைம் டைமில் அதுவும் சீரியல் ஹிட்டாகப் போய், நல்ல ரீச் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் திடீரென நிகழ்ந்திருக்கும் அவரது வெளியேற்றத்துக்கான காரணம் குறித்து டிவி வட்டாரத்தில் மாறுபட்ட பேச்சுகள் கேட்கின்றன. சீரியலில் கிடைத்த பிரபலம் காரணமாக சமீபமாக அவருக்குத் திரைப்பட வாய்ப்புகள் நிறைய வந்ததால் சினிமாவில் கவனம் செலுத்துவதற்காகவே வெளியேறி இருக்கிறார் என கூறப்படுகிறது.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண