பழம்பெரும் நடிகை ரஜீதா கோச்சார் சிறுநீரகக் கோளாறால் டிசம்பர் 23ம் தேதி காலமானார்.
தந்த்ரா, கவாச்...காளி சக்தியோன் சே, ஹாதிம் மற்றும் கஹானி கர் கர் கிய் போன்ற ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகை ரஜீதா கோச்சார் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் டிசம்பர் 23ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70. அவரின் இழப்பால் குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையில் உள்ள அனைவரும் துக்கத்தில் உள்ளனர்.
செல்லமாக 'மா' என அனைவராலும் அழைக்கப்படும் ரஜீதா கோச்சாருக்கு டிசம்பர் 20ம் தேதியன்று மூச்சுத் திணறல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்து சிறுநீரகம் செயலிழக்க வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 23ம் தேதி அன்று இரவு 10:15 மணியளவில் மூளைச்சாவு அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ரஜீதா கோச்சாரின் மருமகள் மற்றும் நடிகையான நூபுர், ரஜீதா கோச்சருடன் தனது கடைசி உரையாடலை பற்றி நினைவு கூர்ந்தார் " டிசம்பர் 23 மாலை அவரை சந்தித்த போது என் கையை பிடித்து கொண்டு அனைத்திற்கும் நன்றி என என் கையை பிடித்து சொன்னார். எனக்காக நீங்கள் வாழ வேண்டும் என நான் சொன்னேன். இது நான் அவருடன் பேசிய கடைசி உரையாடல். அவர் இறக்க போகிறார் என்பதை அவர் உணர்ந்துவிட்டார் என்பதை நான் தெரிந்து கொண்டேன்" என நூபுர் மிகவும் மனம் உடைந்து பேசியிருந்தார்.