Raiza wilson: ரைசாவுக்கு என்ன ஆச்சு..? கண்கலங்கிய முகத்துடன் சோகமான போஸ்ட்... ஆறுதல் கூறும் பிரபலங்கள்..! 

கண்கலங்கிய முகத்துடன் மிகவும் சோகமாக இருக்கும் ரைசா வில்சன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

பிக் பாஸ் சீசன் 1 மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடனேயே ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'பியார் பிரேமா காதல்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப் சார்ந்த கதை என்பதால் இளசுகள் மத்தியில் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தோடு சேர்ந்து ஹீரோ ஹீரோயின் இருவைரையுமே தூக்கிவிட்டது. அதற்கு பிறகும் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வந்தார் ரைசா வில்சன். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், கருங்காப்பியம், தி செஸ் என அடுத்தடுத்து பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

Continues below advertisement

 

 

ரைசா வில்சன்:

சினிமாவில் ரைசா வில்சனுக்கு இருக்கும் ரசிகர்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கானோர் ஃபாலோ செய்கிறார்கள். பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும் தனது இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போஸ்ட் செய்ய தவறுவதில்லை. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கண்களுக்கு குளிர்ச்சியாக எக்கச்சக்கமான கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். அதற்கு லைக்ஸ்களும், கமெண்ட்களும் தாறுமாறாக எகிறும். இப்படி ரசிகர்களை கவர்ந்து வந்த ரைசா திடீரென ஃபாலோவர்களுக்கு போஸ்ட் மூலம் ஷாக் கொடுத்துள்ளார்.

 

கண்கலங்கிய முகம்:

ரைசா வில்சன் கண்கலங்கிய முகத்துடன் மிகவும் சோகமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து "அத்தனை எளிதல்ல, நீங்கள் தனியாக இல்லை. நான் அனைவரும் அதில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து விடுவோம்" என பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த கண்கலங்கிய சோகமான முகத்துடன் கூடிய போஸ்ட் அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் என்ன என புரியாவிட்டாலும் ரைசாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அவர் பாசிட்டிவாக சொல்ல நினைக்கிறாரா? அல்லது குழப்பமான மனநிலையில் இப்படி பதிவிட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பி வந்தாலும் முடிந்த வரையில் வார்த்தைகள் மூலம் ஆறுதல் கொடுத்து  வருகிறார்கள். 

ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் ரைசாவிற்கு கமெண்ட் மூலம் ஆறுதல் கூறியுள்ளார்கள். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் கமெண்டில் "உங்களுக்கு நான் அதிகமான பலதையும் அன்பையும் அளிக்கிறேன். நாங்கள் என்றும் உங்களுடன் இருக்கிறோம்"  என்றுள்ளார். நடிகை மஞ்சிமா மோகன் "இதுவும் கடந்து போகும்" என ஆறுதல் கூறியுள்ளார்.   

 

Continues below advertisement
Sponsored Links by Taboola