தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக உலா வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் மறைந்தாலும் இவரது புகழ் இன்றும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

ஜொள்ளு:

சில்க் பற்றி ஒரு முறை பிரபல நடிகை ராதிகா சக நடிகை சுஹாசினியிடம் ஒரு நேர்காணலில் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, சில்க் ஸ்மிதா எங்கேயாவது உட்காந்தாங்கனா எல்லாரும் ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாங்க. யாருமே கிட்ட போக முடியாது. காலை இப்படி போட்டு உக்காந்து இருப்பாங்க. 

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. ஒரு கம்பெனில இருந்து ஷுட்டிங்கிற்கு கூப்பிட்றாங்க. மேடம் நாங்க பணம் அப்புறம் கொடுத்துட்றோம். நீங்க வந்துடுங்கனு சொன்னாங்க. அதுக்கு அவங்க நான் எதுக்காக வரனும். எனக்கு மார்க்கெட் இருக்கு. எனக்கு கேமரா கீழ வப்பீங்க. மேல வப்பீங்க. நாளைக்கு மார்க்கெட் இல்லனா நீங்க என்ன பண்ணுவீங்க? நீ பணம் கொடு. நான் வர்றேன். 

Continues below advertisement

 மிளகா பஜ்ஜி யாரோ சாப்பிட்டு இருந்தாங்க. அது என்னது? மிளகானா என்ன? மிளகா இல்லமா அதோட பழம். ஓ மிளகா பழமா?

இவ்வாறு அவர் கூறினார். 

கொடிகட்டிப் பறந்த நடிகை:

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த சில்க் தனது 35 வயதிலே தற்கொலை செய்து கொண்டார். 1979ம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான சில்க் ஸ்மிதா தமிழில் வண்டிச்சக்கரம் என்ற படம் மூலமாக 1980ம் ஆண்டு அறிமுகமானார். கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு மட்டும் சில்க் ஸ்மிதாவை இயக்குனர்கள் பயன்படுத்திய நிலையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவரை ஒரு நடிகையாக பாரதிராஜா காட்டியிருப்பார். 

தொடர்ந்து அவருக்கு கவர்ச்சி நடிகை கதாபாத்திரங்கள், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் கதாபாத்திரங்கள் அதிகளவில் வந்தது. ஜெய்சங்கர், ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.  தமிழில் கடைசியாக திரும்பி பார் என்ற படத்தில் வசந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கடைசியாக கன்னடத்தில் ஒரு படத்தில் 1996ம் ஆண்டு நடித்தார். சில்க் ஸ்மிதாவின் நடனத்தில் வெளியான நேத்து ராத்திரி யம்மா பாடல் மிகவும் பிரபலம் ஆகும்.

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு முன்பும், பின்பும் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி பிரபலமான நடிகை யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் அவரது தற்கொலையில் பல மர்மங்கள் அடங்கியிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாவதும் உண்டு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 360 படங்கள் நடித்துள்ளார்.