ரஜினி ராதிகா காம்போ
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ராதிகா காம்போவில் வெளியான படங்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் உண்டு. ஒருபக்கம் ரஜினி தனது ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்தால் தனது போல்டான நடிப்பால் ராதிகா அவருக்கு திரையில் சவால் விடுவார். போக்கிரி ராஜா , ரங்கா , நன்றி மீண்டும் வருக, மூன்று முகம், அன்புள்ள ரஜினிகாந்த் , நல்லவனுக்கு நல்லவன் , ஜீவன போராட்டம் என இருவரும் இணைந்து 9 படங்களில் நடித்துள்ளார்கள். லட்சக் கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் ரஜினிகாந்த் தன்னைப் பார்த்தால் மட்டும் பயப்படுவார் என நடிகை ராதிகா பழைய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன தெரியுமா
ரப்பர் செருப்பு போட்டு வந்த ரஜினி
" ரஜினியும் நானும் நிறைய படங்கள் நடித்திருக்கிறோம். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி லப்பர் செருப்பு போட்டு வந்திருந்தார். நான் அவர் அருகில் உட்கார்ந்திருனேன். அவர் செருப்பைப் பார்த்து பெரிய நடிகர் தான, சூப்பர்ஸ்டார்னு எல்லாரும் சொல்றாங்க. என்னாது இது செருப்பு என கலாய்த்தேன். அன்றில் இருந்து ரஜினி என்னைப் பார்த்தாலே கீழே காலில் இருக்கும் செருப்பை தான் பார்ப்பார். கோச்சடையான் படத்தின் போது லண்டன் சென்றிருந்தோம் அப்போது என்ன ரஜினி ஷூ போட்டிருக்கீங்க என்று கேட்டேன். ரஜினி உடனே கரெக்டா போட்டு வந்துட்டேன் என்று சொன்னார்" என ராதிகா தெரிவித்தார்.
நண்பர்களாக இருந்தாலும் ராதிகா ரஜினி இடையில் கருதுது வேறுபாடுகளும் இருந்து வருகின்றன. சமீபத்தில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை பெரிய விவாதத்தை திரைத்துறையில் தொடங்கியது. அப்போது இதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று சொல்லியிருந்தார். இதற்கு ராதிகா ரஜினியின் மெளம் தவறாக புரிந்துகொள்ளப்படும் , மூத்த நடிகைகள் யார் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் என்ன கருத்து சொல்வது என்று அமைதியாக இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நான் நிற்பேன் என ரஜினி சொல்லலாம் என பேசியிருந்தார்.