BMW i7 M70, 740d M Sport: பிஎம்டபள்யூ நிறுவனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மின்சார வாகனமாக,  புதிய i7 M70 கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


பிஎம்டபள்யூ புதிய கார் மாடல்கள்:


BMW ஆனது அதன் முதன்மை செடான்களான எலக்ட்ரிக் i7 மற்றும் ICE 7 சீரிஸ் வரிசையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, அந்த மாடல்களின் டாப் வேரியண்டாக புதிய BMW i7 M70 மற்றும் 7 சீரிஸ் 740d M ஸ்போர்ட் ஆகிய கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை முறையே ரூ.2.50 கோடி மற்றும் ரூ.1.81 கோடி  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


BMW i7 M70 கார் பேட்டரி விவரங்கள்:



ரேஞ்ச்-டாப்பிங் M70 வேரியண்டில்  BMW நிறுவனத்தின் முழு மின்சார வாகனம் அறிமுகம் ஆகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி,   i7 M70 மாடல் மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இது 650hp மற்றும் 1015Nm ஐ வெளிப்படுத்தும் இரட்டை மோட்டார் அமைப்பை கொண்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மின்சார வாகனமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 101.7kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்  ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால்,  560 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.


வடிவமைப்பு & சிறப்பம்சங்கள்:


பிஎம்டபள்யூ நிறுவனத்தின் M மாடலாக இருப்பதால், i7 M70 ஆனது M மாடலுக்கு உரித்த குறிப்பிட்ட பம்ப்பர்கள்,  கண்ணாடிகள், அலாய்கள் மற்றும் பின்புற ஸ்பாய்லர் ஆகியவற்றைப் பெறுகிறது. இது ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல் முகப்பு விளக்குகள், பிளாக் அவுட் முன் கிரில் மற்றும் ஜன்னல் கோடு மற்றும் நீல M காலிபர்கள் ஆகியவற்றைப் பெறுகிறது. மாறுபட்ட கூரையுடன் கூடிய சிறப்பு டூ-டோன் நிறத்துடன் 8 நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.


 i7 M70 உட்புறத்தில் M லெதர் ஸ்டீயரிங் வீல், ஒரு M ரூஃப்லைனர் மற்றும் 6 அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. பயனாளர்கள் BMW இன்டிவிஜுவல் அப்ஹோல்ஸ்டரியை தேர்வு செய்யலாம். இதில் 9 அப்ஹோல்ஸ்டரி விருப்பங்கள் மற்றும் மூன்று இன்டீரியர் டிரிம் விருப்பங்கள் உள்ளன.


மற்ற அம்சங்களில் முன்பகுதியில் இரட்டைத் திரைகள், எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் இருக்கை, சூடேற்றப்பட்ட, காற்றோட்டம் மற்றும் மசாஜ் இருக்கைகள், பின்புற இருக்கை தியேட்டர் திரை, ஒரு போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் டயமண்ட் ஆடியோ சிஸ்டம், நான்கு விதமான ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டுள்ளன. M70 ஆனது BMW இந்தியாவின் i7 வரம்பில் உள்ள xDrive60 (ரூ. 1.95 கோடி) உடன் இணைகிறது. இது AMG EQS 53 4Matic+ க்கு போட்டியாக உள்ளது. இதன் விலை ரூ.2.45 கோடி ஆகும். 


BMW 740d M Sport விவரங்கள்


புதிய 740d M ஸ்போர்ட் 740i இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் 7 சீரிஸ் வரம்பில் இணைகிறது. இதில் இடம்பெற்றுள்ள 3.0-லிட்டர் இன்லைன் சிக்ஸ் சிலிண்டர் டீசல் இன்ஜின்,  286hp மற்றும் 650Nm திறனை வெளிப்படுத்துகிறது.  இது 6 வினாடிகளில் 0-100kph எனும் வேகத்த எட்டிவிடும்.  இந்த இன்ஜின் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 48V எலக்ட்ரிக் மோட்டாருடன் வருகிறது.


அதன் மூலம் கூடுதலாக 18hp மற்றும் 200Nm திறனை வழங்குகிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 740i இல் இருக்கும் ரிமோட் ஸ்டார்ட் செயல்பாட்டை 740d இழக்கிறது. இது தவிர, புதிய 740d அதன் பெட்ரோல் வேரியண்டிற்கு இணையாக உள்ளது.  மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ், ஆடி ஏ8 எல் மற்றும் லெக்ஸஸ் எல்எஸ் ஆகியவற்றுக்கு 740d M ஸ்போர்ட் போட்டியாக உள்ளது. இந்த இரண்டு மாடல்களும் விரைவில் சந்தையில் விற்பனைக்கு வர உள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI