தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை ராஷி கண்ணா. கொரோனா காலக்கட்டத்தில் ராஷி கண்ணா செய்த உதவிகள் அவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதையையே ஏற்படுத்துவிட்டது. தற்போது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ராஷி கண்ணா பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து , தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போthu அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். ராஷி கண்ணா பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அது குறித்து நெட்டிசன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு அவர் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
ராஷி கண்ணாவின் சமூக வலைத்தள பக்கங்களில் , நெட்டிசன் ஒருவர் “ நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? ,அல்லது யாரையாவது டேட்டிங் செய்து வருகிறீர்களா ? “ என்ற கேள்வியை கேட்க , அதற்கு பதிலளித்த ராஷி கண்ணா “நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலித்தால் அதை உங்களுக்கு முன் கூட்டியே சொல்லிவிடுகிறேன் “ என தெரிவித்தார். அதே போல வருங்கால கணவர் குறித்த எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து கேட்ட ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராஷி கண்ணா “ எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ அதெல்லாம் முக்கியமல்ல ஆனால் அவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.” என பளீச் பதிலளித்துள்ளார்.
எந்த நடிகரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு “ எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும் , தமிழ்ல விஜய் பிடிக்கும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு பிடிக்கும். அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என ஆசைப்படுகிறேன். கதாநாயகிகளை பொறுத்தவரையில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோரை ரொம்ப பிடிக்கும்” என தெரிவித்தார். ராஷி கண்ணா தெலுங்கை விட தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது