தமிழ் சினிமாவின் இளம் நடிகையான பிரியங்கா மோகனின் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “டாக்டர்”. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். பார்த்தவுடன் பிடித்து விடும் அளவுக்கு முதல் படத்தில் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் டாக்டர் படத்தில் அவரின் காமெடி கலந்த நடிப்பை அனைவரும் பாராட்டி தள்ளினர்.
1994 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்த பிரியங்கா மோகன், பெங்களூரில் தான் பிறந்து வளர்ந்துள்ளார். ஆனால் படித்தது சென்னையில் தான். இவரது தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர், தாயார் கர்நாடகாவைச் சேர்ந்தவர். பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்த பிரியங்காவுக்கு மாடலிங்கில் அதீத ஆர்வம் இருந்தது. 2019 ஆம் ஆண்டு கிரிஷ் ஜி இயக்கிய கன்னடத் திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் பிரியங்கா அறிமுகமானார்.
அதே ஆண்டில் விக்ரம் குமார் இயக்கிய நானியின் கேங் லீடர் என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தான் தமிழுக்கு நடிக்க வந்தார். டாக்டர் படத்தை தொடர்ந்து அவர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் ஜோடி சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த பொங்கலுக்கு தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. அதேசமயம் கடந்த ஆண்டு இறுதியில் அவர் நடிப்பில் டிக்டாக் என்ற படம் வெளியானது. இதுதான் தமிழில் அவர் நடித்த முதல் படமாகும். அதில் சற்று நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் பிரியங்கா மோகனின் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு சென்னையில் முக்கிய இடங்களில் வீடு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பெங்களூருவிலும் வீடு, இடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் 5 படங்களிலும் மொத்தத்தில் 8 படம் நடித்திருந்தாலும் பிரியங்காவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக பிரியங்கா தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக பிரதர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.