தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியிருந்த எம்.சி.எக்ஸ். (Multi Commodity Exchange of India (MCX)) வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
ரிலையன்ஸ் பங்கு மதிப்பு உயர்வு
முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதனம் 14% அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே பங்குச்சந்தையில் ரூ.20 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை கடந்த முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு மதிப்பு ரூ.2,957 ஆக வர்த்தகமாகி வருகிறது. பி.எஸ்.இ.-யில் 1.8% அதிகரித்துள்ளது. 600 நாட்களில் ரூ.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்
தங்கம், வெள்ளி, குரூட் ஆயில், கேஸ், செம்பு, இரும்பு போன்ற மூலப் பொருள்கள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பொதுவாக, உற்பத்தியாளர்கள், பயன்பாட்டாளர்களுக்கு நடுவே பாலமாக விளங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தளம், எம்.சி.எக்ஸ்.இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்றைக்கு வர்த்தகம் 4 மணி நேரம் தாமதமாகியது. இந்நிலையில் எம்.சி.எக்ஸ். வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 420.55 அல்லது புள்ளிகள் உயர்ந்து 71,493.04 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 117.45 அல்லது 0.54% புள்ளிகள் உயர்ந்து 21,733.50 ஆக வர்த்தகமாகியது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
கோல் இந்தியா, யு.பில்.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, என்.டி.பி.சி., பஜாஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா, கோடா மஹிந்திரா,லார்சன், சிப்ளா, மாருதி சுசூகி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே, டாக்டர். ரெட்டீஸ் லேப்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், டைட்டல் கம்பெனி, ஓ.என்.ஜி.சி., டாடா மோட்டர்ஸ்,டாடா ஸ்டீல், டி.சி.எஸ்., அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்டஸ், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
ஹிண்டால்கோ, க்ரேசியம், அதானி எண்டர்பிரைசிஸ், டிவிஸ் லேப்ஸ், பவர்கிரிட் கார்ப், விப்ரோ,இந்தஸ்லேண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், சி.டி.சி., ஜெ.எஸ்.டபுள்யு, டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
நிதி துறை, சுகாதார துறை பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.06 ஆக உள்ளது. ஸ்மால்கேப் 0.5% சரிவடைந்துள்ளது. ஹிண்டால்கோ 14% சரிந்துள்ளது. ரெப்கோ நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 23.1% அதிகரித்துள்ளது.