தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியங்கா மோகன் . தமிழில் டாக்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் , மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விரைவில் டான் படம் வெளியாகவுள்ள நிலையில் , பிரியங்கா மோகன் அதன் புரமோஷன் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்திய நேர்காணலில் தனது கல்லூரி வாழ்க்கை குறித்து சினிமா துவங்கியது குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.
”பி.சி ஸ்ரீராம் சார் எடுத்த புகைப்படங்களை பார்த்துதான் என்னை டாக்டர் படத்துல கமிட் பண்ணாங்க. அப்படித்தான் எனது திரைப்பயணம் தொடங்கியது. எனக்கு பி.சி.ஸ்ரீராம் சார் எடுத்த புகைப்படங்கள் எனக்கு ரொம்ப பொக்கிஷமானது. நான் சினிமாவுல இருக்கேனோ இல்லையோ , இவ்வளவு பெரிய லெஜெண்ட் நம்மை ஃபோட்டோ எடுத்துருக்காங்க அது போதும் அப்படினுதான் அந்த சமயத்தில் தோன்றியது. நானி மற்றும் சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்குமே ஒரு வரலாறு இருக்கு. அவங்க இரண்டு பேரும் ஒரே இரவில் பெரிய ஆளாகல , அதே போல வாரிசு நடிகர்களும் கிடையாது. அவங்க கஷ்டப்பட்டு , எல்லா ஸ்டேஜையும் தாண்டிதான் வந்துருக்காங்க. அவங்க ரெண்டு பேரு மேலயும் சமமான மரியாதை இருக்கு . ஏன்னா இவ்வளவு பெரிய நடிகர்களா வளர்வது எளிமையான விஷயம் கிடையாது. எனக்கு டான் படத்துல நடிக்கும் பொழுது , காலேஜ் போன மாதிரிதான் இருந்தது. எனக்கு ஷூட்டிங் போனது போல இல்லை. காலேஜ்ல சைட்லாம் அடிச்சுருக்கேன் . ஆனால் யாருனு நியாபகம் இல்லை. எனக்கு இன்ஜினியரிங் கணக்கு எல்லாம் கஷ்டமா இருக்கும் . ரொம்ப சிரமப்பட்டுதான் படித்தேன். நீங்க யாரும் இன்ஜினியரிங் எடுக்காதீங்க. எம்1, எம்2 எல்லாம் ரொம்ப கஷ்டம் . “ என்றார் பிரியங்கா மோகன்.