பிரியாமணி
பாரதிராஜா அறிமுகப்படுத்திய திறமையான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் பிரியாமணியை முத்தழகாக அறிமுகம் காட்டியது அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிரியாமணி பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானின் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதுதவிர்த்து கடந்த ஆண்டு இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகியுன. தற்போது விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் பிரியாமணி.
கலப்பு திருமணம் பற்றி
நடிகை பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் இவர் மீது கடுமையான வெறுப்பு கொட்டப்பட்டது. இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பிரியாமணி மனம் திறந்து பேசியுள்ளார்
" என்மேல் அக்கறை கொண்டவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் தான் என்னுடைய திருமணத்தை அறிவித்தேன். ஆனால் எந்த காரணத்தினாலோ என்மேல் அவ்வளவு வெறுப்பை கொட்டத் தொடங்கிவிட்டார்கள். லவ் ஜிஹாத முழக்கமிட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு குழந்தைகள் பிறந்தால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளாவார்கள் என்று சொன்னார்கள். நான் சினிமாவைச் சேர்ந்தள் என்பதால் என்னை என்ன வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் என்னைப் பற்றி எதுவும் தெரியாத இவர்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு . எனக்கு இதில் எந்த பங்கும் இல்லை. அடுத்த சில நாட்களுக்கு எனக்கு நிறைய மெசேஜ் வரத் தொடங்கின. இதெல்லாம் சேர்ந்து என்னை ரொம்ப பாதித்தது. இப்போது கூட நான் ஒரு போஸ்ட் பதிவிட்டால் 10 இல் 9 கமெண்ட்ஸ் மதம் சார்ந்ததாக தான் இருக்கும் " என பிரியாமணி தெரிவித்துள்ளார்
அந்த ஒரு வார்த்த சொன்னா ரஜினி வேற ஒருத்தரா மாறிடுவார்...கூலி பட அனுபவத்தை பகிர்ந்த நடிகர் செளபின்
ராஷ்மிகா மந்தனாவுக்கு குட்டி தங்கச்சி இருக்கா...அடேங்கப்பா இத்தனை வருட வித்தியாசமா