குட் பேட் அக்லி


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து ஜி. வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

Continues below advertisement


குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் 


முழுக்க முழுக்க மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படம் முழுவதும் அஜித்தின் பல படங்களின் ரெஃபரன்ஸ் இடம்பெறுகிறது. சண்டைக் காட்சிகளில் இடம்பெறும் இளையராஜா பாடல்கள் திரையரங்கில் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு கூட்டிச் செல்கின்றன. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வந்தாலும் மற்ற தரப்பு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே தெரிவித்து வருகிறார்கள். 


வசூலைப் பொறுத்தவரை அஜித்தின் கரியரில் மிகப்பெரிய வசூல் சாதனையை எட்டியுள்ளது இப்படம். முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ 28.5  கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அஜித் பற்றி பிரியா பிரகாஷ் வாரியர் 


இப்படத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரியா வாரியர் " 


இதை ரொம்ப நாளாக சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன். என்ன எழுதினாலும் உங்களை நான் எவ்வளவு மதிக்கிறேன் என்பதை வெளிப்படுத்த போதுமானதாக இல்லை.  முதல் முறை பேசிக் கொண்டதில் இருந்து நானும் உங்களில் ஒருத்தி என்று என்னை உணர வைத்தீர்கள். செட்டில் நீங்கள் இருந்த நேரமெல்லாம்  யாரும் தனித்துவிடப்பட கூடாது என்பதில் கவனமாக இருந்தீர்கள்.  ஒரு குழுவா சேர்ந்து சாப்பிட்ட உணவுகள், நகைச்சுவைகள், செலவிட்ட நேரம் பற்றி நான் சொல்லாமல் இருக்க முடியாது. எல்லாவற்றின் மீதும் இவ்வளவு ஆர்வம் காட்டும் ஒரு நபரை நான் சந்தித்ததில்லை. உங்களுக்குள்ள இருக்கிற சின்ன "பினோச்சியோ" மேல எனக்கு ரொம்ப மரியாதையும் அன்பும் இருக்கு. நீங்க குடும்பம், கார்கள், பயணம், பந்தயம் பத்தி பேசும்போது உங்க கண்கள் ஒளிர்வதை நான் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பில் உங்க பொறுமையும் அர்ப்பணிப்பும் என்னைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒன்று, இந்த அனுபவங்களை இனி வரக்கூடிய காலங்களில் ஞாபகம் வைத்திருப்பேன்.  உங்க மென்மையும் அரவணைப்பும் எனக்கு இன்னும் ரொம்பப் பிடிச்சிருக்கு அதுதான் என்னை இவ்வளவு எழுத தூண்டியது.  நீங்க ஒரு உண்மையான ஜெம்.



வாழ்க்கையில்  எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் , நிலையாக இருக்க வேண்டும் என்பது  உங்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அனுபவம், அஜித் சார், GBU-ல உங்ககூட எனக்குக் கிடைச்ச அனுபவத்தை நான் எப்பவும் ரசிப்பேன். இந்த  வாய்ப்பு கிடைச்சதுக்கு நான் ரொம்ப நன்றியுள்ளவளாக  இருக்கேன். தொடர்ந்து எங்கள் எல்லாரையும் மகிழ்வித்து, அறிவூட்டிக்கிட்டே இருங்க. இன்னொரு முறை உங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கிற சிறிய பேராசை எனக்கு இருக்கிறது " என அவர் எழுதியுள்ளார்