ஆஸ்கரில் புதிய பிரிவு


திரைத்துறை கலைஞர்களுக்கு  உச்சபட்ச அங்கீகாரமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.  2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 3 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்கரில் புதிய் விருதுக்கான பிரிவு ஒன்றை இணைக்கப்படுவதாக பேசப்பட்டு வந்தது. அந்த வகையில் அடுத்த ஆண்டு சிறந்த நடிகர்கள் தேர்வுக்கான பிரிவின் கீழ் ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கிறது. தற்போது ஆஸ்கர் நிர்வாக மற்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2028 ஆம் ஆண்டு முதல் சிறந்த ஸ்டண்ட் டிசைன் பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கிறது. 


ஜாக்கி சானுக்கு ஆஸ்கர் ?


இந்த அறிவிப்பு வெளியானது முதல் ஜாக்கி சான் ரசிகர்கள் முதல் விருதை ஜாக்கி சானுக்கு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். சினிமா வரலாற்றில் தற்காப்பு கலையில் சிறந்த நடிகர்களில் ஒருவராக ஜாக்கி சான் கருதப்படுகிறார். 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ள ஜாக்கி சான் தனது படங்களில் ஸ்டன்ட் காட்சிகளை தேனே வடிவமைத்து நடித்தார். இந்த காட்சிகளின் போது அவர் மிக அபாயகரமாக காயம்பட்டுள்ளார். மூளை , கண் , கை , கால் , என தனது பல அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார். ஒரு பக்கம் நகைச்சுவை இன்னொரு பக்கம் அதிரடி சாகசங்கள் என திரையில் ரசிகர்களின் கவனத்தை கட்டிப்போட்டு வைத்தவர் ஜாக்கி சான்.  2016 ஆம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 






தற்போது ஸ்டன்ட் டிசைன் பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கும் நிலையில் ஜாக்கி சானுக்கு தற்போது வயதாகிவிட்டது. அவர் ஃபார்மில் இருந்திருந்தால் நிச்சயம் இந்த விருது அவருக்கு தான் கிடைத்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.