Priya Bhavani Shankar: தனது அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாக கூறி மேடையிலேயே பிரியா பவானி சங்கர் அழுதது அங்கிருந்தோரை கலங்க செய்தது.
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர், சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன் யானை, அகிலன், சிம்புவின் பத்து தல, ருத்ரன், பொம்மை படங்களிலும் நடித்துள்ளார். கார்த்தி, அருண் விஜய், எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்த நிலையில் இந்தியன் 2 படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பிரியா பவானி சங்கர் உயர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற உலக ரோஜா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரியா பவானி சங்கர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு தனது தாய்க்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.
புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்ததால் முற்றிலும் குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்ததாகவும், கூறியுள்ள பிரியா பவானி சங்கர், சனது தாய்க்கு சீக்கிரம் புற்றுநோய் குணமாகிடும் என நம்பிக்கை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், நிகழ்ச்சியில் புற்றுநோய் பாதிப்பு குறித்து பலரும் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் தனக்கு ஊக்கம் அளிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மருத்துவர்களை முழுதாக நம்பும்படி கூறிய அவர், ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்தால் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையையும் அங்கிருந்தவர்களுக்கு அளித்தார்.
மேலும் தனது அம்மாவுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதால் தன்னையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தியதையும் பவானி சங்கர் பகிர்ந்து கொண்டார். முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரியா பவனை சங்கர், அவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து மகிழ்வித்தார்.
மேலும் படிக்க: Iraivan: இதயம் பலகீனமானவங்க ஜாக்கிரதை.. ஜெயம் ரவியின் இறைவன் படத்துக்கு ஏ சான்றிதழ்.. இதுதான் காரணம்!
”அந்த படத்தில் நடித்ததால் வீட்டிற்கு சென்று அழுதேன்” - ஜெயம் படம் பற்றி ஷாக் கொடுத்த சதா..!