சின்னத்திரையில் செய்தியாளராக இருந்து , அதன் பிறகு சீரியலில் நடித்து சினிமா வாய்ப்பை பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் , கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார். நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பிரியா தனது அழகு மற்றும் ஃபிட்னஸ் சீ்க்ரெட்ஸை பகிர்ந்திருக்கிறார்.


 






அதில் ”நான் தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன்.நான் முழுக்க முழுக்க உடற்பயிற்சி எல்லாமே டிரைனர்கிட்ட விட்டுருவேன். அவர் 24 மணி நேரமும் எப்படி வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி கொடுக்கலாம்னு யோசிக்குற ஆள். டயட்ல நான் அவ்வளவு கரெக்டான  ஆள் கிடையாது. ஆனால் டயட் இருக்கது நல்ல விசயம்தான். நான் என்னை நினைப்பேன்னா எதுக்கு சம்பாதிக்குறோம். அதுக்கு வாழுறோம் . நல்லா பிடிச்சதை சாப்பிட்டுவிட்டு சந்தோசமா இருப்போமே அப்படிங்குறதுதான். டயட்ல இருந்தா என்னுடைய வொர்க் அவுட் டைம 30 , 40 நிமிசத்திலேயே முடிச்சுடுவாங்கன்னு நினைக்குறேன். ஃபிட்னஸ் , ஸ்கின்கேர் எல்லத்தையும் நாம குழப்பிக்கிறோமோனு எனக்கு சில நேரங்களில் தோணும் . காரணம் ஸ்லிம்மா இருக்கதுதான் அழகு , ஆரோக்கியம்னு கிடையாது. ஒல்லியாக உடற்பயிற்சி செய்யறது கிடையாது. நம்மை ஆரோக்கியமா வைத்துக்கொள்ளத்தான் உடற்பயிற்சி. உடற்பயிற்சி பண்ணும் பொழுது உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். அதுதான் உங்களை அழகா காட்டும். நான் ராசாயன காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டேன் . சிகப்பா இருக்கறது, பருக்கள்  இல்லாம இருக்கது 
 ,கருவளையம் இல்லாம இருக்கதுதான் அழகுனா நிச்சயமா கிடையாது. நம்மை நாமே பாதுகாத்துகுறதுதான் அழகு.  சல்ஃபேட் ஃபிரீ ஷாம்பு பயன்படுத்துங்கள் முடிக்கு அதுவே போதும் “ என தெரிவித்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்