பிரியா பவானி சங்கர்


சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு வருகைத் தந்தவர் பிரியா பவானி சங்கர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து முதலில் ரசிகர்களை ஈர்த்தார்.


தொடர்ந்து, ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர், கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா, களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், திருசிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள ‘ரத்னம்’ படத்தில் பிரியா நாயகியாக நடித்துள்ளார். 


முன்னதாக திரையுலகம் மட்டுமின்றி எல்லா தொழில்களிலும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக பிரியா குற்றம் சாட்டினார். “இந்தியாவில் எல்லா இடங்களிலும், தொழில்களிலும் பெண்கள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி பேசும்போதும், அவர்கள் சொல்வதைக் கேட்கும்போதும் நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுவதை நிறுத்த வேண்டும்” என அவர் பேசியிருந்தது ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.


பிரியா பவானி சங்கர் காதலர்


தனது கல்லூரி காலத்தில் இருந்தே ராஜவேலு என்கிறவரை காதலித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். இதை அவர் வெளிப்படையாகவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஜோடி காதலித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை பிரியா பவானி ஷங்கரிடம் அவருடைய அண்மைகால கிரஷ் யார் என்று கேட்கப்பட்ட போது, அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கும் பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் மீது கிரஷ் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 




இந்தியில் வெளியான மஸான் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் விக்கி கெளஷல். சாம் பகாதுர், சர்தார் உத்தம் சிங், உரி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளஷலுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


ரத்னம்


ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ரத்னம் படத்தில் கிருஷ்ணா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கெளதம் மேனன் , யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்சு பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாக இருக்கிறது.