பிரியா பவானி ஷங்கர்:
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், படத்தில் நடித்தார். அதன் பிறகு மான்ஸ்டர், மாஃபியா சேப்டர் 1, ஹாஸ்டல், யானை, பத்து தல, ருத்ரன், பொம்மை, இந்தியன் 2 என்று பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த வருடம் திரைக்கு வந்த டிமாண்டி காலனி 2 படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தியன் 3:
அதன் பிறகு வந்த 'பிளாக்' படமும் ரசிகர்களிடையே அதிகளவில் பேசப்பட்டது. இப்போது இந்தியன் 3 படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 3 படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிப்பு ஒருபுற இருந்தாலும் பிஸ்னஸ் மீது ஆர்வம் கொண்ட பிரியா பவானி ஷங்கர், ஹோட்டல் ஒன்றை துவங்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரின் கைவசம் தற்போது ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளதால், இவருக்கான வரவேற்பு குறைந்து விட்டதா? என ரசிகர்களுக்கு ஒருபுறம் சந்தேகம் எழுந்தாலும்... தரமான கதைக்காத பிரியா காத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
35-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்:
சினிமாவையும் தாண்டி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், இன்று தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், 2025-ல் காதலர் ராஜ் வேலை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். எப்படியும் இந்த ஆண்டு திருமண வாழ்க்கையில் பிரியா பவானி நுழைய உள்ள நிலையில், இந்த ஆண்டு சிங்கிளாக தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
பிரியா பவானி சங்கர் சொத்து மதிப்பு:
இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு, ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் ரூ.40 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையில் சம்பளம் பெறுகிறார். ரூ.50 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 மாடல் கார் ஒன்றையும் வைத்திருக்கிறார். இவருக்கு பீச் ஹவுஸ் ஒன்றும், அடையாறில் சொந்த வீடு ஒன்றும் உள்ளது. ஹோட்டல் பிஸ்னஸ் ஒன்றை துவங்கி அதன் மூலமும் லாபம் பார்த்து வருகிறார்.