சூர்யா, கார்த்தியுடன் நடித்த பிரபல நடிகை ப்ரணிதா சுபாஷூக்கும் தொழிலதிபர் நிதின் ராஜுவிற்கும் கடந்த ஆண்டு பெங்களுருவில் திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் இடையே நேற்று நடைபெற்ற இந்த  திருமணத்தில் மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். 


இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார் ப்ரணிதா. அதில், “என் கணவனின் 34வது பிறந்தநாளுக்கு தேவதைகள் எங்களுக்கு அன்புப் பரிசை அனுப்பியுள்ளனர்” என பதிவிட்டிருக்கிறார். மேலும், அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்களில் அவர் கர்ப்பமானது உறுதி செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளை மகிழ்ச்சியாக காண்பிக்கிறார். ப்ரணிதாவுக்கும், அவரது கணவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.






முன்னதாக அவர் திருமணம் நடந்து முடிந்தவுடன் புகைப்படங்களை பகிர்ந்த அவர், “மிகுந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் இதனை அறிவிக்கிறோம், 30 மே 2021 அன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திருமண நாள் குறித்து உங்களிடம் தெரிவிக்காதது குறித்து நாங்கள் மிகுந்த மன்னிப்பு கேட்டு கொள்கிறோம், தற்போது நிலவும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்திற்கு முதல் நாள் வரை தேதியை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்தது. திருமண நாள் குறித்து தெளிவான முடிவெடுக்காமல் உங்களை குழப்ப விரும்பவில்லை. எங்களுடைய தாழ்மையான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் அனைவரும் எங்கள் திருமணத்தின்போது உடன் இருப்பதை விட எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியாது. நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள், நிலைமை சீரான பிறகு உங்களுடன் கொண்டாட நினைக்கிறோம். அன்புடன் ப்ரணிதா & நிதின்" என பதிவிட்டிருந்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண