பிரபல நடிகை பூர்ணாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபருக்கும், அவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்த விழா புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பூர்ணா.
தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ திரைப்படம் மூலம் அறிமுகமான பூர்ணா, அதன்பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். தலைவி மற்றும் த்ரிஷ்யம் 2 போன்ற படங்களில் சிறப்பாக நடித்தார். வெப் சீரிஸ்களிலும் நடித்து கலக்கினார்.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் பூர்ணா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், ‘குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது அடுத்த வாழ்க்கைப் பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அது அதிகாரப்பூர்வமானது” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், நிச்சயதார்த்த விழாவில் இருந்து சில படங்களை வெளியிட்டார். நடிகை செய்தியைப் பகிர்ந்தவுடன், நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பு வருகின்றனர்.
நடிகை பிரியாமணி, “உங்களுக்கும் ஷானித் இக்காவுக்கும் வாழ்த்துக்கள்! கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்றார். நடிகர் பாரிஸ் லக்ஷ்மி, “வாழ்த்துக்கள் அன்பே” என்று கூறினார். நடிகர் ஷில்பா பாலா, “வாழ்த்துக்கள் அன்பே! எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டார்.
அவரது வருங்கால கணவர் ஜேபிஎஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். பூர்ணா சில நண்பர்கள் மூலம் தனது வருங்கால கணவரை சந்தித்தார். சில காலம் ஒருவரையொருவர் அறிந்த பிறகு, தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருவரும் முடிவு செய்தனர். பூர்ணா மற்றும் ஷானித் ஆசிப் அலியின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும். கொச்சி டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தனது திருமணம் தனது அம்மாவின் மிகப்பெரிய கனவு என்று தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்