எனது ரசிகர்கள் மீது நான் 2 மடங்கு அன்பு வைத்துள்ளேன் என நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகை பூனம் பாஜ்வா தெரிவித்துள்ளார். 


கடந்த 2009 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் பரத் நடித்த சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்கா, அரண்மனை-2, குப்பத்து ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாரசிகர்களிடையே பிரபலமானார். ஆனால் இவரது நடிப்புக்கு இதுவரை சரியான கேரக்டர்கள் அமையவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 


சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இதனிடையே ஊடகத்தில் வெளியான நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர் ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் சேவல் படம் முதல் இப்போது வரை திரையுலகில் இருப்பது என்பது என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு நடனத்தில் ஆர்வம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டும் வகையில் படங்கள் அமையதில்லை. 






மேலும் தன் மீது அன்பு காட்டும் ரசிகர்களிடத்தில் 2 மடங்கு அன்பு வைத்துள்ளேன்.சென்னைக்கு வருவதும், தென்னிந்திய படங்களில் நடிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளதாக பூனம் கூறியுள்ளார். அப்போது தொகுப்பாளர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிடுவது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு இன்ஸ்டாவில் கிட்டதட்ட 96% ஆண்கள் தான் என்னை பின்தொடர்கிறார்கள். என் புகைப்படம் வைரலாவது மகிழ்ச்சியளிக்கிறது. 


அதேசமயம் இதுவரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோக்களில் நீச்சல் உடை போட்டோக்கள் தான் அதிகம். நான் எடுப்பவற்றில் எது அழகாக இருக்கிறதோ அதை பதிவிடுவேன் அவ்வளவுதான். என்னை பொறுத்தவரை கிளாமர் என்பது உடலை மையப்படுத்திய விஷயமாக நினைக்கவில்லை. சினிமாவில் அப்படி காட்டப்படுகிறது. நான் நடித்த தமிழ் படங்களில் கேரக்டர்கள் அனைத்துமே குடும்ப கேரக்டர்கள் தான். 


மேலும் என்னோட நடித்த நடிகர்களில் அப்படங்களுக்கு பிறகு எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.  நயன்தாரா எனக்கு நல்ல தோழி. அவரைப் பற்றிய செய்திகளை நான் எதிலாவது படித்தோ அல்லது கேட்டுத்தான் தெரிந்து கொள்கிறேன் எனவும் பூனம் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.