தமிழில் இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை வைத்து இயக்கிய 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் நடித்த முதல் படமே படு தோல்வியடைந்ததால், வழக்கம் போல் இவரை மற்ற தமிழ் இயக்குனர்கள் கண்டு கொள்ளவே இல்லை. தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கிய பூஜா ஹெக்டே தன்னுடைய அழகாலும், கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், போன்ற நடிகர்களின் முதல் சாய்ஸ் ஹீரோயினாக உள்ளார். அதே நேரத்தில் தற்போது ஹிந்தி பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கதவை தட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில் ரன்வீர், மற்றும் சல்மான் கானுடன் நடிக்க உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் விஜய் திரைப்படத்தின் மூலமாக திரும்பியிருக்கிறார். இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே  நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.


இந்த நிலையில், பூஜா ஹெக்டே சமீபத்தில் மாலத் தீவிற்கு சுற்றுப்பயணமாக சென்றார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது, மாலத்தீவில் பிகினி உடையுடனும், அழகிய நடையுடனும் கூடிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.


 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண