பார்வதி 


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து தன்னுடைய நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பார்வதி ,மலையாளத்தில் கடந் 2006 ஆம் தேதி வெளியான அவுட் ஆஃப் சிலபஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்


இதனைத் தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் தமிழில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து மலையாளத்தில் சார்லீ, என்னு நிண்டே மொய்தீன், உயரே, டேக் ஆஃப் உள்ளிட்டப் படங்களில் நடித்த பார்வது மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் குறிப்பிடத்தகுந்த பாராட்டுக்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


பெண்ணிய சிந்தனைகள் 


தன்னுடைய நடிப்பைத் தவிர்த்து தன்னுடைய கருத்துக்களுக்காக பேசப்படுபவராகவும் இருந்து வருகிறார் பார்வதி. குறிப்பாக சினிமா துறையில் துணிச்சலாக பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்துவருகிறார். இதற்காக பல இடங்களில் விமர்சிக்கப்பட்டாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஒருபோதும் அவர் தயங்கியது இல்லை. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பகிரங்கமாக கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார் பார்வதி.


சூப்பர்ஸ்டார் பட்டத்தில் ஒன்றுமே இல்லை


இந்த நேர்காணலில் பார்வதி பேசியிருப்பதாவது “சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்குமே எதையுமே கொடுத்துவிட முடியாது. அந்தப் பட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது . இந்தப் பட்டம் இமேஜ் கொடுக்கிறதா என்று தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார். “ என்னை ஒரு சூப்பர் ஆக்டர் என்று கூறினால் நான் சந்தோஷப் படுவேன், ஆனால் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தில் அப்படி என்ன இருக்கிறது” என்று கூறிய பார்வதி மலையாளத்தில் சூப்பர் ஆக்டர்களாக ஃபகத் ஃபாசில் , ஆசிப் மற்றும் ரீமா கல்லிங்கல் ஆகியோர் இருக்கிறார்கள் என்று அவர் பாராட்டியுள்ளார்.


தூதா


விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா , பார்வதி திருவோது நடித்துள்ள தூதா இணையத் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.  இந்த தொடர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது.


தங்கலான்


 18ஆம் நூற்றாண்டு காலக்கட்டங்களில் கோலார் தங்க வயலில் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை அடிப்படியாக கொண்டு பீரியாடிக் ஆக்ஷன் படமாக பா. ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் தான் 'தங்கலான்'. (Thangalaan) சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதுவரையில் இந்திய சினிமா பார்த்திராத ஒரு அழுத்தமான திரைக்கதையாக இருக்கும் என்றும் இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.