களவாணி, மதயானைக் கூட்டம், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஓவியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நேர்மையாக விளையாடி அனைத்து ரசிகர்களின் மனதை வென்றார். தற்போது கலகலப்பு 2, சேவியர் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

ஆபாச வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ போன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்து அது ஓவியா தான் என தெரிவித்தனர். அதே போல, வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று ஓவியா மறுப்பு தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்தார். மேலும், இந்த வீடியோ மூலம் ஓவியாவின் பெயரை கெடுப்பதற்காக விஷமிகள் பரப்பியுள்ளதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த வீடியோ சமூகவலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. 

பதிலடி கொடுத்த ஓவியா

நான் வதந்தியை நினைத்து பயப்படுவது கிடையாது. நான் எதையும் எதிர்கொள்ள தயராகத்தான் இருக்கிறேன். இதற்கு எல்லாம் பயப்படும் ஆள் நான் கிடையாது. ஒரு சிலர் என்னை பார்த்து குடிக்கு அடிமை ஆகிவிட்டதாக கருத்து தெரிவிக்கின்றனர். அப்படி பார்த்தால் நான் சிறு வயதில் இருந்தே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். நான் எதையும் தைரியமாக எதிர்கொள்வேன். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிட்டு தான் மற்றதை பார்ப்பேன் என ஓவியா தெரிவித்தார். 

ஜிலேபி கொண்டை

இந்நிலையில், ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ போன்ற ஹேர் ஸ்டைலில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரை போன்ற வெள்ளை உடை, சிகை அலங்காரத்தில் ஓவியா ஜொலிக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் பாராட்டு தெரிவித்தாலும், மறைந்த காமெடி நடிகர் கூறுவது போல், இது என்னடா கொண்டை, என்னது இது என பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.