நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமா தான் பெஸ்ட் என்று சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி “சின்ன குஷ்பு”என்று தமிழ் நாட்டில் தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா தமிழ், தெலுங்கில் பிசியான நடிகை.
ஹன்சிகா ஹிரோயினாக அறிமுகமானது தன்னுடைய 16-வது வயதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு திரைப்படத்தில். தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார் ஹன்சிகா.
குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய சினிமா பயணத்தில் ஹன்சிகா ஹிரோயினாக அறிமுகமானது தன்னுடைய 16-வது வயதில். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்தார். 2008-ஆம் ஆண்டு பிந்தாஸ் எனும் கன்னட திரைப்படத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக நடித்தார். மிழில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் 2011-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த எங்கேயும் காதல் ஆனால் திரையில் முதலில் வெளியானது மாப்பிள்ளை திரைப்படம்.
அதன்பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், போகன், குளேபகாவலி என நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளுக்காக தன்னார்வ அமைப்பு மற்றும் ஒரு காப்பகத்தை நடத்தி வருகிறார். ஹன்சிகா மிகவும் அழகாக ஓவியங்கள் வரைபவர். தான் வரையும் ஓவியங்களை விற்று அதில் வரும் தொகையை தன்னுடைய குழந்தைகள் காப்பகத்திற்காக ஒதுக்குகிறார்.
நடிகர் சிம்புவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர். இப்படியெல்லாம் அறியப்பட்ட ஹன்சிகா தென்னிந்திய சினிமா குறித்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.
அண்மையில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், "எனக்கு எல்லா மொழி சினிமாக்களும் பிடிக்கும். ஆனால் எனக்கு தென்னிந்திய சினிமாவில் நிறைய கேரக்டர்கள் கிடைக்கின்றன. தென்னிந்திய சினிமா அதிக துடிப்புடன் இயங்குகிறது. பாலிவுட் சினிமாவைவிட பல மடங்கு வளர்ந்து நிற்கிறது. அதனால் தான் இன்று தென்னிந்திய சினிமாக்கள் இந்தி பெல்ட்டிலும் கொடிகட்டிப் பறக்கின்றன. அந்த துடிப்பு தான் என்னை தென்னிந்திய சினிமா பக்கம் அதிகம் ஈர்த்து வைத்துள்ளது" என்று கூறியுள்ளார்.
அவரின் இந்தக் கருத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னும் சிலர் மார்க்கெட் டவுன் ஆகிவிட்டதால் தமிழ், தெலுங்கு வாய்ப்புகள் வேண்டி ஹன்சிகா இவ்வாறு பேசியுள்ளார் என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.