தமிழ் சினிமாவின் அனைவரின் பேவரைட் நடிகையாக வலம் வரும் நடிகை நித்யா மேனன் பள்ளி ஆசிரியராக மாறிய சம்பவம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கன்னடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நித்யா மேனன் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்த அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் மணி ரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் நித்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இதனையடுத்து காஞ்சனா 2, 24, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நித்யா தமிழ் சினிமா ரசிகர்களால் பேவரைட் நடிகையாக மாறினார். இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மீண்டும் நித்யா மேனனுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
இதனையடுத்து நித்யா ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வெளியானது. இதனை மறுத்த அவர், அப்படி ஒரு எண்ணமே, திட்டமும் இப்போதைக்கு இல்லை என விளக்கமளித்ததோடு, சினிமா துறையில் தனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். அவர்கள் தனக்கு எதிராக பொய்களைப் பரப்புகிறார்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில் தற்போது ஆரம் திருகல்பனா என்ற மலையாளப்படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பின் இடைவெளியில் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற நித்யா மேனன், அங்கு ஆசிரியர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். பின்னர் ஒரு வகுப்பு சென்று பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் பாடம் நடித்தினார். இந்த வீடியோ நித்யா மேனன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.