'இருக்கு ஆனா இல்ல...' எஸ்.ஜே. சூர்யாவின் இந்த காமெடி ஞாபகம் இருக்கா அப்போ அந்த நடிகையையும் உங்களுக்கு நிச்சயமாக ஞாபகத்தில் இருக்கும். ஆம் அவர் தான் நடிகை நிலா. பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகைகளான பிரியங்கா சோப்ரா, ப்ரனீதி சோப்ரா உள்ளிட்டோரின் உறவினர் மீரா சோப்ரா தான் இந்த நிலா.


நிலாவின் என்ட்ரி: 

2005ம் ஆண்டு எஸ். ஜே. சூர்யா இயக்கி நடித்த 'அன்பே ஆருயிரே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிலா என்ற பெயரில் அறிமுகமானார் மீரா சோப்ரா. முதல் படமே சரியான ஹிட் படமாக அமைந்ததால் அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அப்படத்தை தொடர்ந்து லீ, மருதமலை, ஜாம்பவான், ஜகன் மோகினி, காளை என ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டினார். அதிலும் மருதமலை திரைப்படம் வடிவேலுவின் எவர்க்ரீன் காமெடியால் மிகவும் பிரபலமானது.


 




குறைந்த மார்க்கெட்:


அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்து வந்த நிலாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய கடைசி படமான 'இசை' படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போனார். 2015ம் ஆண்டு வெளியான கில்லாடி திரைப்படம் தான் நிலா கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம்.

வைரலாகும் செய்தி :

 
இந்த நிலையில் 2006ம் ஆண்டு நடிகர் பிரஷாந்த் ஜோடியாக நிலா நடித்த 'ஜாம்பவான்' படத்தில் அவர் ஏற்படுத்திய ஒரு பிரச்சினை குறித்து அப்படத்தின் இயக்குநர் ஏ.எம். நந்தகுமார் தற்போது தெரிவித்துள்ள செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

நிலா போட்ட கண்டிஷன்: 

ஜாம்பவான் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி குற்றாலத்தில் படமாக்கப்பட்டது. அதில் ஒரு காட்சியில் நிலா தண்ணீருக்குள் மூழ்கி எழுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த காட்சி நடிப்பதற்காக நிலா போட்ட கண்டிஷன் என்னவென்றால் நான் ஷவரில் தான் குளிப்பேன் அல்லது நான் மூழ்கும் அந்த தொட்டியில் 12000 லிட்டர் மினரல் வாட்டர் நிரப்பினால் மட்டுமே நான் குளிப்பேன். இந்த தண்ணியில் எல்லாம் நான் குளிக்க மாட்டேன் என கூறியுள்ளார். ஓர் கட்டத்தில் ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே கிளம்பி சென்றுவிட்டாராம். தயாரிப்பாளர்கள் கெஞ்சியும் கூட நிலா ஒத்துக்கொள்ளவில்லையாம்.

அதோடு நிறுத்தாமல் ஜாம்பவான் பட தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக சொல்லி பிரஸ் மீட் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிறகு இந்த விஷயம் தயாரிப்பாளர் தியாகராஜன் காதுகளுக்கு செல்ல மும்பைக்கு ஜாம்பவான் தயாரிப்பாளர் சென்று நிலாவிடம் சமாதானம் பேசியுள்ளார். அப்போதும் நிலா வைத்த கண்டிஷன் என்னவென்றால் இந்தியாவில் என்னால் நடிக்க முடியாது பாங்காக் சென்றால் நடிப்பேன் என கூறியதால் வேறு வழியில்லாமல் அந்த காட்சிகாக பாங்காக் சென்று ஷூட்டிங் நடத்தினோம்.