Watch Video: ‛ஏய்... ஏய்... இந்தாம்மா... என்ன இந்த ஓட்டம் ஓடுற...’ ஏன் இப்படி ஓடினார் நிக்கி கல்ரானி?

 

திடீரென ஒருவர் ஓட்டம் பிடித்தால் நமக்கு என்ன தோன்றும்... அது ஓட்டம் பிடிப்பவரின் செய்கையை பொருத்தது. சிலர் தப்பிக்க நினைத்து ஓடுவார்கள், சிலர் தப்பித்து ஓடுவார்கள், சிலர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கூட ஓடுவார்கள். ஓட்டத்தத்தில் ்அத்தனை ரகம் இருக்கிறது.

இங்கே நாம் பார்ப்பவரும் அப்படி மாதிரியான ஒரு ஓட்டம் தான் ஓடுகிறார். ஆனால், ஏன் ஓடுகிறார்... எதற்காக ஓடுகிறார் என்கிற காரணம் தான் தெரியவில்லை. ‛ஏ... சின்ன மச்சான்...’ என பெரிய மச்சான்களின் மனதில் இடம் பிடித்த நிக்கி கல்ரானி தான், இந்த ஓட்டத்திற்கு சொந்தக்காரர்.



எங்கோ ஒரு சூட்டிங் ஸ்பாட் என்று மட்டும் தெரிகிறது. கேரவேனில் மேக்கப் முடிந்து, பாகுபலி தேவசேனா மாதிரி உடல் முழுவதும் மேக்கப். பார்க்க அவ்வளவு ரம்யம். கதவு திறந்திருக்கும் கேரவேனில் முலாம் பூசிய குத்துவிளக்காக அப்படியே வந்து இறங்குகிறார் நிக்கி கல்ராணி.

அதுவரை எல்லாம் ஓகே. ‛அட அட அடா... இதுல்லயா பொண்ணு.. என்ன ஒரு அடக்கம்... என்ன ஒரு பவ்யம்...’ என நாம் யோசித்துக் கொண்டிருந்தது தான் பாக்கி, திடீரென விழுந்தடித்து ஓடத் தொடங்கிவிட்டார் நிக்கி.

முதல் பந்துக்கு முண்டியடித்துச் செல்வதைப் போல, அப்படி ஒரு ஓட்டம். சூட்டிங் பணியில் இருப்பவர்கள் பேயடைத்து பார்க்கிறார்கள் அந்த ஓட்டத்தை. போட்டிருக்கும் மேக்கப்பிற்கும், ஓட்டத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் அதுவும் ஒரு வகை அழகு தான்.





பின்னணியில் ஒரு இசை, அதற்கு ஏற்ற அசை என நிக்கி, நிக்காமல் ஓடியே கிறங்கடிக்கிறார். ஆனால்... கடைசி வரை ஏன் ஓடினார் என தெரியவில்லை. ‛எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்ல மாட்றாங்கேனு...’ வடிவேலு அழுவாறே... அதே மனநிலை தான், ஆனால் குமுதா ஹேப்பியாச்சே.. நாமும் ஹேப்பியா பார்த்துட்டு போவோம்! 

கடைசியில் விசாரிச்சா.. அம்மணி சூட்டிங்க்கு லேட்டா போனாங்களாம்...! எப்படி... இறங்கிற வரை மெதுவா இறங்கிட்டு, ஸ்பார்ட் நெருங்கும் போது, பரபரப்பா காட்டிக்கிட்டாங்களாம். பிழைக்கத் தெரிந்தவர் தான்.