காவலன், பள்ளிக்கூடம், அம்முவாகிய நான் உள்ளிட்ட பல படங்களிலும் ஏராளமான சீரியல்களிலும் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நீபா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தங்கமகள்' சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். 


திரையுலகில் மிகவும் பிரபலமான நடன அமைப்பாளர்களாக இருந்த  மாலினி மற்றும் வாமன் தம்பதியின் மகள் தான் நீபா. பெற்றோர் இருவரும் நடன கலைஞர்கள் என்பதால் நீபாவும் மிகவும் சிறந்த டான்சராக பல நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 'மானாட மயிலாட', 'மஸ்தானா மஸ்தானா' உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். 




சமீபத்தில் நீபா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய தந்தையின் இழப்பு குறித்து மனவேதனையுடன் பேசி இருந்தார்.


எனக்கு அம்மாவை விட அப்பாவை தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இது அம்மாவுக்கும் தெரியும். அவர் ரொம்ப நல்ல மனுஷன். நான் எப்பவுமே அப்பா பக்கம் தான். அப்பா இறந்ததுக்கு பிறகு தான் நான் அம்மாவோட ரொம்ப நெருக்கமானேன். நான் எங்க அப்பா மாதிரிதான். அம்மா ரொம்ப சைலண்டா இருப்பாங்க. அவங்க உண்டு அவங்க வேலை உண்டு என இருப்பாங்க. அம்மாவை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அப்பா கலகலவென இருப்பார். செட்டில் எல்லாருடனும் ஒரே மாதிரியாக பழகுவார். 


என்னோட வளர்ச்சியை பார்க்க அப்பா இருந்து இருக்கணும். என்னோட கல்யாணம், குழந்தை பிறந்த போது இப்படி பல இடத்திலும் நான் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணேன். மஞ்சள் காமாலை வந்து கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். அவருடைய பிறந்தநாளுக்கு ஹேண்டி கேமரா ஒன்னு கேட்டு இருந்தார். நானும் வாங்கி தரேன் என சொல்லி இருந்தேன். அவரோட பர்த்டே டிசம்பர் 25 ஆனால் டிசம்பர் 8ம் தேதியே தவறிட்டார். 


அவருக்கு ஒரு படம் இயக்கணும் என ரொம்ப நாள் ஆசை இருந்துது. அதற்காக அவர் ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி பண்ணி வைச்சு இருந்தார். ஆனா அதுவும் அவரால பண்ண முடியாம போயிடுச்சு. அவர் கேட்டதையும் என்னால வாங்கி கொடுக்க முடியல, அவர் ஆசைப்பட்டது போல அவரை இயக்குநரா பார்க்க முடியாம போயிடுச்சு. அவர் ஒரு நல்ல உழைப்பாளி, ஆனா லக் இல்லை. சினிமாவில் லக் ரொம்ப அவசியம். என்ன தான் கடுமையாக உழைத்தாலும் அதிர்ஷ்டம் ரொம்ப ரொம்ப முக்கியம். 


அப்பா தரப்பு சொந்தக்காரங்களோட எல்லாம் பெரிய அளவில் டச் இல்ல. அப்பா இருந்தவரைக்கும் எல்லாரும் நல்லா பழகுனாங்க. ஆனால் அப்பா இறந்ததுக்கு பிறகு யாரும் சரியா பேசல. யாருடனும் தொடர்பில் இல்லை. அப்படி பேசுனா கூட முதல இருந்த அந்த நெருக்கம் இப்ப இல்ல என்றார்