நஸ்ரிய நஸிம் நடித்து கடந்த 2014 ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
நஸ்ரியா நஸிம்
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவர் கதாநாயகியாக அறிமுகமானது மேட் டேட் படத்தில் தான். இதனைத் தொடர்ந்து 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு அவருக்கு மிக சிறப்பானதாக அமைந்தது. தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்து தள்ளினார் நஸ்ரியா. அப்படி அவருக்கு வெற்றிப்படமாக அமைந்து நஸ்ரியாவின் சுட்டித்தனத்தை அடையாளம் காட்டிய படம் தான் மலையாளத்தில் வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா.
ஓம் ஷாந்தி ஓஷானா
ஜுட் ஆந்தனி ஜோசஃப் இயக்கத்தில் நஸ்ரியா , நிவின் பாலி , வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்து நடித்த இப்படம் 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் ஒன்றாக மாறியது.
இப்படத்தில் நஸ்ரியா ஸ்கூல் பெண் முதல் காலேஜ் , திருமணம் வரை பல்வேறு வயது தோற்றங்களில் நடித்திருந்தார். சிறிய வயதில் இருந்தே டாம் பாயாக வளரும் நஸ்ரியா, தான் திருமணம் செய்துகொள்ளும் நபர் தனக்கு பிடித்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்படி அவர் தேர்வு செய்பவர் தான் இவரை விட 7 வயது மூத்தவரான நிவின் பாலி. கிட்டத்தட்ட ஒரு கொரியன் படத்தைப்போல் காமெடி ரொமான்ஸ் இரண்டும் கலந்த ஒரு படமாக அமைந்தது ஓம் ஷாந்தி ஓஷானா. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அவர்களின் பாராட்டுக்களையும் பெற்றார் நஸ்ரியா.
10 ஆண்டுகள்
தற்போது இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவு கூறும் வகையில் நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படம் குறித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர். "இப்படம் வெளியாகி ஒரு தசாப்தம் முடிந்திருக்கிறது. இன்று வரை நிறைய பேர் பூஜா என்று தான் என்னை அழைக்கிறார்கள். பூஜா எல்லாருக்கும் பிடித்தமான ஒரு கேரக்டராக இருந்தாள். அவள் ஒரு ரெளடி பேபி. என்னையும் அந்த கதாபாத்திரத்தையும் நம்பியதற்காக நான் என்றும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்." என்று நஸ்ரியா பதிவிட்டுள்ளார்.