Royal Enfield 350: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 350சிசி இன்ஜின் உடன் விற்பனையாகும், மோட்டார்சைக்கிள்கள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ராயல் என்ஃபீல்ட்:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செயல் திறன் மற்றும் வசதி போன்ற அம்சங்களால், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிகவும் நம்பகத்தன்மை மிக்க நிறுவனமாகவும் கருதப்படுகிறது. அதோடு, வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும், எதிர்பார்ப்புகளையும் புரிந்து பல மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சார்பில் இந்திய சந்தையில் விற்பனையாகும் 350சிசி இன்ஜின் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


ராயல் என்ஃபீல்ட் 350சிசி பைக் லிஸ்ட்:


1. கிளாசிக் 350


ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் மோட்டார்சைக்கிள் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1950-களில் பிரபலமான அந்நிறுவனத்தின் G2 மாடலை அடிப்படையாக கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கிளாசிக் 350 மாடலின் ஆரம்ப விலை ரூ.1.93 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்) ஆகும். சிங்கிள் சிலிண்டர், ஃபியூல் இன்ஜெக்டட் ஏர்-ஆயில் கூல்ட் 350 சிசி இன்ஜினை கொண்டுள்ளது. 6100 ஆர்பிஎம்மில் 20.2BHP  மற்றும் 4000 ஆர்பிஎம்மில் 27NM ஆற்றலையும் உற்பத்தி செய்து லிட்டருக்கு, 41 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.


2. புல்லட் 350


ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புல்லட் 350 மாடல் மோட்டார்சைக்கிள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 90 ஆண்டுகால பாரம்பரியமாக இந்த வாகனம் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் புல்லட் 350 மாடலின் ஆரம்ப விலை ரூ.1.73 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்) ஆகும்.  சிங்கிள் சிலிண்டர்- SOHC - ஃபியூல் இன்ஜெக்டட் 350 சிசி இன்ஜினை கொண்டுள்ளது. 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் 20.2bhp மற்றும் 27Nm ஆற்றலை உற்பத்தி செய்து லிட்டருக்கு, 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.


3. ஹண்டர் 350


ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஹண்டர் 350 மாடல் மோட்டார்சைக்கிள் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் ஹண்டர் 350 மாடலின் ஆரம்ப விலை ரூ.1.49 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்) ஆகும்.  சிங்கிள் சிலிண்டர் ஜெ சீரிஸ் 350 சிசி இன்ஜினை கொண்டுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 20.2bhp மற்றும் 27Nm ஆற்றலை உற்பத்தி செய்து லிட்டருக்கு, 36.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.


4. மீடியோர் 350


ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மீடியோர் 350 மாடல் மோட்டார்சைக்கிள் கடந்த 2020ம் ஆண்டு  இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் மீடியோர் 350 மாடலின் ஆரம்ப விலை ரூ.2.29 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்) ஆகும்.  சிங்கிள் சிலிண்டர்- SOHC - ஃபியூல் இன்ஜெக்டட்  350 சிசி இன்ஜினை கொண்டுள்ளது. 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் 20.4 PS மற்றும் 27Nm ஆற்றலை உற்பத்தி செய்து லிட்டருக்கு, 41 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.


ராயல் என்ஃபீல்ட் கோன் கிளாசிக் 350:


இதனிடையே, மீடியோர், கிளாசிக், ஹண்டர் மற்றும் புல்லட் ஆகிய மாடல்களை தொடர்ந்து, 350 சிசி இன்ஜின் பிரிவில் ஐந்தாவது மாடலாக கோன் கிளாசிக் மாடலை வரும் 23ம் தேதி ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இது கிளாசிக் 350 உடன் அதன் பெரும்பாலான அடிப்படைகளை பகிர்ந்து கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆற்றல் வெளியீடு 20எச்பி மற்றும் 27என்எம் டார்க்கில் இருக்கும் என கருதப்படுகிறது. கோன் கிளாசிக்கின் சிறந்த வேரியண்டின் விலை ரூ.2.30 லட்சத்தைத் தாண்டும் என கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI