குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தடம் பதித்து 2013, 2014 இல் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில்  கதாநாயகியாக வலம் வந்தவர் நஸ்ரியா. குறுகிய காலங்களில் குறுகிய திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தார் நஸ்ரியா. அவர் நடிப்பை தொடராவிட்டாலும்  அவருக்கான ரசிகர் பட்டாளம் இன்றும் தொடர்ந்து நிற்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி நடிகராக வளர்ந்தவர்கள் பட்டியலில் நஸ்ரியாவுக்கு முக்கிய இடமுண்டு. இவரின் 28 வது பிறந்தநாள் இன்று.


 


 
                             


1. 2005 ஆம் ஆண்டு தனியார் மலையாள சேனலில் 'ஸ்ருதிலயம்' என்கிற நிகழ்ச்சிக்கு சிறுவயதிலேயே தொகுப்பாளரானார். அதன் பின்பு நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான 'பலுங்கு' திரைப்படத்தில் மம்முட்டிக்கு குழந்தையாக  நடித்திருந்தார்.


2. 2006 ஆம் ஆண்டில் 'சந்திரகாந்தம்' என்கிற தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொடர்ந்தார்.அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு மம்முட்டி நடித்த ' பிராமணி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.


3. மீண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளராக ' ஸ்டார் சிங்கர்' என்கிற தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.


4. 2013 ஆம் ஆண்டில் நஸ்ரியா கதாநாயகியாக ' மேட் டேட்' படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு, இயக்குனர் அல்போன்ஸ்  புத்திரன் இயக்கத்தில் அவர் நடித்த 'நேரம்' திரைப்படம் அவருடைய கரியருக்கு முக்கிய புள்ளியாக அமைந்தது. அத்திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த அன்பும் புகழும் ஏராளம்.


5. 'ராஜா ராணி','பெங்களூர் டேஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் தனக்கென நீங்கா இடத்தை பிடித்தார். குறுகிய காலத்தில் தனது நடிப்பின் மூலம் மக்களின் அன்பை வெகுவாக பெற்றார்.



                               


6. இன்று நாம் பெரிதாக கொண்டாடி வரும் நடிகரான 'ஃபகத் ஃபாசிலுடன்' 2014 ஆம் ஆண்டு அவருக்கு  திருமணமானது. அதன் பிறகு அவர் சினிமாவில் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டார். அந்த இடைவெளியிலும் மக்கள் மனதில் நஸ்ரியாவுக்கு நீங்கா இடமிருந்தது.


7. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் 'கூடே' திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.


8. இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு தனது கணவரான ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து 'டிரான்ஸ்' திரைப்படத்தில் நடித்தார். சினிமாவில் நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் ஒரு எண்ட்ரி கொடுக்கும் போது அவருக்கு கிடைத்த வரவேற்பும்,அன்பும் அலாதி.


9. இவர் இந்த ஆண்டு நடிகர் நானியுடன் ' அண்டே சுந்தரன் நிக்கி' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனது அடையாளத்தை பதிவு செய்தார்.