Chiththa: '2023ம் ஆண்டின் மிகச்சிறந்த படம் சித்தா' லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா புகழாரம்!

Chiththa: 2023ம் ஆண்டின் மிகச்சிறந்த படம் சித்தா என்று லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா புகழாரம் சூடியுள்ளார்.

Continues below advertisement
Chiththa: 2023ம் ஆண்டின் சிறந்த படம் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சித்தா என்று நடிகை நயன்தாரா புகழ்ந்துள்ளார்.
 

சித்தா:

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் சித்தா. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் “சித்தா”. இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த சித்தா படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு திபு நினன் இசையமைத்திருந்தார். சித்தா படத்தில் நிமிஷா சஹான், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்தது. 

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து அழுத்தமான கதைக்களத்தை கையாண்ட சித்தா படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான சித்தா படம் ரூ.25 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

2023ம் ஆண்டில் வெளியான சிறந்த படம்:

கமல்ஹாசன், மணி ரத்னம் உள்ளிட்ட பலரும் சித்தா படத்தை பாராட்டி தள்ளினர். அந்த வரிசையில் நடிகை நயன்தாராவும் சித்தா படத்தை பாராட்டியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், ”2023ம் ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களில் சித்தா படமும் ஒன்று. சித்தா படத்தின் மூலம் சித்தார்த் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சித்தா படத்தின் மூலம் இயக்குநர் அருண்குமார் சிறந்த படப்பை வெளிப்படுத்தியுள்ளார். சித்தா படத்தின் ஒட்டு மொத்த குழுவின் உழைப்பால் தான் அருண்குமார் மற்றும் சித்தார்த்தால் மிக சிறந்த படைப்பை தர முடிந்தது” என உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டுள்ளார். 

2023ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் ஜவான் மற்றும் இறைவன் படம் வெளிவந்தது. ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்துள்ளது. 

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: "பிக்பாஸ் வீட்டை கலங்கடித்த விஜயகாந்த் மறைவு" கண்கலங்கி பேசிய கமல்ஹாசன்!

Thalapathy Vijay: “நடிகர் விஜய்க்கு விழுந்த அடி” - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பரபரப்பு ..அதிர்ச்சியில் ரசிகர்கள்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola