தமிழ் திரையுலகின் இளம் நடிகர் ஜெய். இவருடைய 39வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது, இந்த நிலையில், அவருடைய பிறந்தநாள் பரிசாக அவருடைய புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்குபவர் நயன்தாரா. இவரது 75வது படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார்.
நயன்தாராவுடன் இணையும் ஜெய்:
கடந்த 2002ம் ஆண்டு பகவதி படம் மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். சென்னை 600028, சுப்பிரமணியபுரம், வாமனன், கோவா. ராஜா ராணி ஆகிய படங்கள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். 2011ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக ஜெய் நடித்த ராஜா ராணி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜெய்க்கு கலகலப்பு 2 படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் சமீபகாலமாக எந்தவொரு படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இந்த சூழலில், நயன்தாரா நடிக்கும் 75வது படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய்க்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ராஜா ராணி படத்தில் ஜெய் - நயன்தாரா காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. அதில் ஜெய் பேசும் 'கண்ணு வேர்க்குது.. எனக்கு உங்க அப்பான்னதாங்க பயம்.. மத்தபடி ஐ லவ் யூங்க' என்ற வசனம் மிகவும் பிரபலம் ஆகும்.
எதிர்பார்ப்பு:
ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். அதேசமயம் நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலே நடித்து வருகிறார். இதனால், அவரது 75வது படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறாரா? இல்லை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் காஃபி வித் காதல் படத்தில் நாயகனாக ஜெய் நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி ட்ரிப்ள்ஸ் என்ற வெப்சீரிஸிலும் அவர் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: Suriya 42 Update: ஹார்டீன்களை பறக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்.. வெளியான சூர்யா 42 அப்டேட்!
மேலும் படிக்க: Adipurush Hanuman Poster: சர்ச்சைகளுக்கு நடுவே புதிய போஸ்டர்... அனுமன் ஜெயந்தி வாழ்த்து சொன்ன ’ஆதிபுருஷ்’ டீம்!