இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவனை நேசிக்கும் பாடல் ஒன்றை ஸ்டோரி ஆக வைத்ததுடன், விக்னேஷ் சிவனுடனான உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். ஜவான் வரும் 7ம் தேதி ரிலீசாவதையொட்டி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா இணையத்தில் டிரெண்டானார். இன்ஸ்டாகிராமில் முதல்முறையாக குழந்தைகளின் முகத்தை வெளியே காட்டிய நயன்தாரா ரஜினியின் அலப்பறை பாடலுக்கு ஏற்ப ’திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என பதிவிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய ஒரே நாளில் ஒரு மில்லியன் பாஃபோவர்ஸை நயன்தாரா பெற்றார்.
இன்ஸ்டாகிராமில் இரண்டாவது பதிவாக ஜவான் படத்தின் டிரெய்லரையும் பகிர்ந்து கொண்டார். இதனால் ஜவான் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பகிர்ந்த ஸ்டேட்டஸ் வைரலாகி வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றிருக்கும் “ஆழியில் இருந்து அலறி எடுத்தேனே...அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே..அடி அழகா சிரிச்ச முகமே...” என்ற வரிகளை கொண்ட பாடலை ஸ்டோரியாக வைத்திருந்தார் நயன்தாரா. இதனை குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் நானா? என்ற கேள்வியை அனுப்பினார். அதை பார்த்த நயன், நீயே தான் என பதிலளித்துள்ளார். அதில் தலையில் அடித்துக் கொள்ளும் ஸ்டிக்கர் ஒன்றும் உள்ளது.
விக்னேஷ் சிவனுடனான உரையாடலையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டகிராம் ஸ்டோரி நயன்தாரா வைத்துள்ளார். இதைபார்த்த அவரது பாலோவர்ஸ், என்னம்மா இப்படி பண்றியேம்மான்னு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: Vetrimaaran: 'மூச்சுவிடும் நேரத்துக்குள் பகைவரால் அழிக்கப்படுவர்' - திருக்குறள் பகிர்ந்து வெற்றிமாறனை வாழ்த்திய விடுதலை படக்குழு