தென்னிந்தியாவின் பிரபல நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. இவரும் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரது திருமணமும் வரும் ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.


முதல்வருடன் சந்திப்பு 


இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஷ்சிவன் பூங்கொத்து அளித்தார். இந்த சந்திப்பின்போது, வரும் 9-ந் தேதி நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசிர்வதிக்குமாறு இருவரும் தங்களது திருமண அழைப்பிதழை முதல்வருக்கு அளித்து அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.




இந்த சந்திப்பின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ.வும், நடிகரும், தயாரிப்பாளருமாகிய உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். உதயநிதி ஸ்டாலினுடன் நயன்தாரா இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய 2 படங்களில் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார். நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் முதலில் வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கோரிக்கையை் முன்னிட்டு இந்தியாவிலே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.


நயன்- விக்னேஷ்சிவன் திருமணம்


இதன்படி, இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கும் என்று முதலில் தகவல்கள் வெளியாகியது. ஆனால், திருப்பதியில் திருமணத்திற்கு கொரோனா விதிகள் காரணமாக குறைவான நபர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கோவில் நிர்வாகம் கூறியதால், மாமல்லபுரத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணத்தை தனியார் ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய உள்ளது.




விக்னேஷ்சிவன் – நயன்தாரா திருமணத்தில் முக்கிய திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரசிகர்களும் திரளாக திரண்டு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர். நயன்தாரா விக்னேஷ்சிவனுடான தனது திருமணத்தை முன்னிட்டு, கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு திருச்சி அருகே உள்ள விக்னேஷ்சிவனில் குலதெய்வம் ஆலயத்திற்கு நேரில் சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை காண ஊர்பொதுமக்களும், ரசிகர்களும் திரண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண