Nandita Swetha: அது என்ன வயித்துல மார்க்.? கேள்விகேட்ட நெட்டிசனுக்கு பொறுமையாக ரிப்ளை கொடுத்த நடிகை நந்திதா..!
வயிற்றில் என்ன மார்க் என்று கேட்ட ரசிகர் ஒருவருக்கு நடிகை நந்திதா அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகைகள் போட்டோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், அட்டக்கத்தி, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி, கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை நந்திதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை பதிவிட்டார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர், அது என்ன வயிற்றில் தழும்பு மாதிரி ஏதோ இருக்கிறதே என்று கேட்க, அதற்கு பதிலளித்த நந்திதா, “"என் வயிற்று பகுதியில் இருக்கு மார்க் பற்றி கேட்பவர்களுக்கு..
நான் தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் வரை Dhee ஷோவில் நடுவராக உட்கார்ந்து இருக்கிறேன். நிகழ்ச்சியின் இடைவேளை நேரத்தில் தான் இதுபோன்ற போட்டோஷூட்டுகளை எடுக்க முடியும். அது skirt line mark.stretch mark இல்லை.
ஒருவேளை அது stretch mark க்காகவோ அல்லது வேறு ஏதாவதாக இருந்தாலோ பராவாயில்லை என்று கூறியிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.