தனது வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகை நமீதா பாடல் பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நமீதா தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ், பார்த்திபன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொழிகளில் நடித்த அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களான நடிகை ஓவியாவுடன் பிரச்சினை செய்தது போன்ற சில செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. 






இதனையடுத்து திருப்பதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்ட நமீதா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு விரைவில் தாயாக உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன்பின் அவர் நடத்திய கர்ப்பகால போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நமீதாவின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா, நடன இயக்குநர் கலா மாஸ்டர், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஆரவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தம்பதியினரை ஆசீர்வதித்தனர். மேலும் மேடையில் தமிழ் சினிமாவில் இடம் பெற்றிருந்த அம்மா பாடல்கள் பாடப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து மைக்கை வாங்கிய நடிகை நமீதா, நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தில் இடம் பெற்ற ஆராரோ ஆரிரரோ பாடலில் சில வரிகளை பாடினார். இதுதொடர்பான வீடியோவை பிரபல இணைய ஊடகமான Galatta Tamil தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  இதனைக் கேட்டு அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் நடிகை நமீதாவை பாராட்டிய நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண