கோலிவுட்டில் சில வருடங்களுக்கு முன்னதாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை நமீதா  . தெலுங்கு நடிகரை திருமணம் செய்துக்கொண்ட நமீதா  விரைவில் அம்மாவாக போகிறார் என்பது நாம் அறிந்ததுதான். அவரின் தற்போதைய ஃபோட்டோ ஷூட்தான் இணையத்தில் வைரல். நமீதா ஆரம்பத்தில் ஹை மார்க்கெட்டை தக்க வைத்திருந்தாலும் கூட உடல் பருமனால் பல வாய்ப்புகளை இழந்தார். அது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 







அதில் ”2015 ல முதன் முதலா ஜிம்ல சேர்ந்து வெயிட் லாஸ் பண்ணேன். அதுக்கு பிறகு என்னுடைய உடல்ல மாற்றங்கள் இருந்துட்டே இருந்துச்சு. அதன் பிறகு நான் முறையான உணவு முறைகளை பின்பற்றி அதே எடையை தக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தேன். நான் அதிகபட்சம் 97 கிலோ இருந்தேன். இப்போ 83 கிலோ இருக்கேன்.  நான் 74,75 கிலோ இருந்தாதான் என்னுடைய  உயரத்திற்கு ஏற்ற எடையில் இருக்கிறேன் என அர்த்தம். மாமியார் மாமனார் வரும் பொழுது , ஷார்ட்ஸ் அண்ட் டி-ஷெர்ட் போட மாட்டேன். அப்போதெல்லாம் பேண்ட் அணிவதுதான் வழக்கம். அது நான் அவங்களுக்கு கொடுக்கும் மரியாதை என நினைக்கிறேன்.  நான் தென்னிந்திய சினிமாவை பற்றி பேசுகையில், ஆரம்ப காலக்கட்டத்தில் நிறைய மன அழுத்தத்தை சந்தித்திருக்கிறேன்.  ஹார்மோனல் பிரச்சனை மற்றும் தினமும் பீட்சா சாப்பிடுவதால் , ஹார்மோனல் ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்யும். அதனால் எனது  உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிட்டது. மீடியா என்னை “குட்டி யானை “என அழைத்தார்கள் . அதுமட்டுமல்ல  “ நீலத்திமிங்கிலம் “ என்றார்கள். நான் அதை நினைத்து வருத்தப்படுவேன். ஆனால் அவங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும் , எனக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து என்ன தெரியும். அதையெல்லாம் நான் விளக்கிக்கொண்டிருக்க முடியுமா ?. தென்னிந்தியாவில் இருக்கும் நிறைய டாப் நடிகர்களுக்கு  கூட பெரிய தொப்பை இருக்கிறது. ஆனால் ஹீரோயின்ஸுக்கு மட்டும்தான் இந்த அழுத்தத்தை போடுவார்கள் . அது ஏன் என்றுதான் தெரியவில்லை. நமது சினிமாத்துறை அதிகம் ஆண் ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கிறது. நான் பலமுறை எனது திறமையை நிரூபித்திருக்கிறேன். ஆனாலும் இங்கு நடிகைகளுக்கு மட்டும் சில ரூல்ஸ் இருக்கிறது. “ என நமீதா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்