பாலிவுட் நடிகர்கள் புதிய வீடு கட்டுவது என்றாலே அது பரபரப்பான செய்தியாக இருக்கும். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை மீரா சோப்ரா வீடு கட்டிவருவது தற்போது பரபரப்பான செய்தியாகி உள்ளது. அவரது வீட்டின் இண்டீரியர் டிசைனர் மீரா சோப்ராவை வீட்டை விட்டு வெளியே தள்ளி வன்முறையில் ஈடுபட்டதுதான் அதற்குக் காரணம். 






தமிழில் இயக்குநர் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே ஆருயிரே என்கிற படத்தில் நடித்தவர் நிலா, இவர் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மீரா சோப்ரா என அறியப்படுகிறார். பிரபல பாலிவுட் நடிகர்களான பிரியங்கா சோப்ரா மற்றும் பரிநீத்தி சோப்ராவின் உறவினர் இவர். இவர் அண்மையில் மும்பையின் அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கினார். வீட்டிற்கு ராஜீந்தர் தேவான் என்கிற இண்டீரியர் ட்சைனர் ஒருவரையும் நியமித்தார். மீரா பானராஸில் சூட்டிங்கில் பங்கேற்க வேண்டி இருந்ததால் புதிய டிசைனருடனான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டு பனாரஸ் கிளம்பியுள்ளார். 15 நாட்கள் சூட்டிங் முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர் புதிய வீட்டை பார்வையிடச் சென்றுள்ளார். அங்கே அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததுள்ளது. 


இதுகுறித்துக் கூறியுள்ள அவர், ‘வீட்டின் உள்வேலைகளுக்காக 17 லட்ச ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போடப்பட்டது. முன்பணமாக அதில் 8 லட்ச ரூபாய் அளித்துவிட்டு நான் பனாரஸ் புறப்பட்டு சென்றேன். திரும்பி வந்து பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உள் வேலைகளுக்கு காஸ்ட்லியான டிம்பர்கள் தேவை என பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் வந்து பார்த்தபோது விலை மலிவான மரப்பொருள்களை உபயோகித்திருந்தார். அதை ஏன் என்று கேட்டேன். என்னை என்னுடைய வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு இப்படிக் கேள்வி எழுப்பினால் வேலை செய்ய மாட்டோம் என மிரட்டினார். நான் என்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்து அவருடனான காண்ட்ராக்டை முடித்துக் கொள்வதாகச் செய்தி அனுப்பினேன்.அதற்கு அவர் ஒத்துவராமல் மேலும் என்னை மோசமாகத் தாக்கிப் பேசத் தொடங்கினார்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து மும்பை காவல்நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு பிரிவு 357 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த டிசைனர் மீது தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. மீரா சோப்ரா இந்தியில் 1920 லண்டன் மற்றும் செக்‌ஷன் 375 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.