Meena: போட்டோ உடன் ஓணம் வாழ்த்து சொன்ன மீனா... அதோடு அவங்க சொன்ன வார்த்தை இருக்கே..!

Meena Onam wishes: இன்று ஓணம் பண்டிகையை ஒட்டி நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கம் மூலம் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

Meena wishes Happy Onam : நடிகை மீனா தெரிவித்த ஓணம் வாழ்த்து...- ரசிகர்கள் மகிழ்ச்சி

Continues below advertisement

வாழ்க்கை  என்பது ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது. தென்னிந்திய  சினிமாவில் 90களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை மனம் முடித்தார். இவர்களுக்கு நைனிகா எனும் ஒரு மகள் உண்டு. இனிமையாக நடந்த மீனாவின் வாழ்க்கையில் கடந்த ஜூலை மாதம் ஒரு பெரிய பூகம்பம் வெடித்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். கணவர் இறந்த 40 நாட்களுக்கு மேல் தான் மீனா வீட்டை விட்டு வெளியே வந்தார். 

 

 

மீனா சோசியல் மீடியாவில் ஆக்டிவ் : 

எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மீனா தனது தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார். தற்போது உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

 

 

மீனா ஓணம் வாழ்த்து :

இன்று ஓணம் பண்டிகையை ஒட்டி நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கம் மூலம் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஓணம் பண்டிகை உங்கள் அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நிரப்ப வேண்டும். எனது மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் நடிகை மீனா. 

 

 

மீண்டும் மீனா :

நடிகை மீனாவின் துக்கம் மீள முடியாதது தான் என்றாலும் தனது மகளுக்காக தனது வாழ்க்கையை பலத்தோடும் தைரியத்தோடும்    முன்னோக்கி நகர்த்த வேண்டும் என வாழ்த்துகிறோம். அவரின் இந்த பதிவு ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலை தந்துள்ளது. மேலும் மீனாவை மீண்டும் திரையில் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். 

அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்!!!


   

Continues below advertisement