மீனா பிறந்தது சென்னையில். இவரது அப்பா துரைராஜ் தமிழர். மற்றும் அம்மா ராஜ மல்லிகா கண்ணூரை சேர்ந்த மலையாளி. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா, கோலிவுட்டை மட்டுமல்ல ஜப்பான் வரைக்கு புகழ் பரப்பி வெற்றி நாயகியாக வலம் வந்தார்.


குழந்தை நட்சத்திரம் தொடங்கிய ஹீரோயின் வரை: 


அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்த திரைப்படம் அவருக்கு பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. நடிப்பு ஒருபக்கம் இருக்க தொலைதூர கல்வி வாயிலாக பிஏ வரலாறு படித்துமுடித்தார் மீனா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகள் அவருக்குஅ சரளமாக பேச தெரியும். அதுமட்டுமல்ல அவருக்கு பாடவும் வரும். ஒருசில படங்களில் அதையும் முயற்சித்திருக்கிறார். பொக்கிஷம் திரைப்படத்தில் பத்மப்ரியாவிற்கு பின்னணி குரல் கொடுத்தவர் மீனா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெங்களூருவைச் சேர்ந்த ஐடி நிபுணரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா, நடிகர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்திருப்பார்.


90களின் கனவுக் கன்னி:


தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் படங்களில் ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். அதன் பிறகு இவர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ரஜினிகாந்துடன் வீரா, எஜமான், முத்து போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அண்ணாத்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக அவர் ரஜினியுடன் நடித்து 1984ல் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் தான் அனைவராலும் அறியப்படுகிறது. ஆனால் அவர் 1982லேயே எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.




எஜமான் தந்த அனுபவம்:


முதன்முதலில் நடிகை மீனா நடிகர் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த படம் எஜமான். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தில் மீனா தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். எனக்கு சூட்டிங் செல்லும்போதெல்லாம் படபடப்பாக இருக்கும். பயமாக இருக்கும். கூச்சமாக இருக்கும். தயக்கமாக இருக்கும். அது எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான உணர்வாக இருந்தது. நான் அவருடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறேன். நான் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டியதானதால் ஏற்பட்ட உணர்வு அது.


முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினி சாருக்கு நான் குட் மார்னிங் கூட சொல்லவில்லை. அப்புறம் அப்படியே இயல்பாகிவிட்டேன். நான் எஜமான் நடிப்பதற்கு முன்னரே தெலுங்கில் 3 படங்கள் ஹிட் கொடுத்திருந்தேன். எஜமான் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் செய்தார்கள். அப்போது அங்கு எல்லோரும் என்னை அடையாளம் கண்டுகொண்டு மீனா, மீனா என்று குரல் கொடுத்தார்கள். ரஜினி சார் இருக்கும்போது என்னைப் பற்றி பேசுகிறார்களே என்ற பயம் எனக்கு இருந்தது. அந்த பயத்துடன் ரயிலில் ஏறிவிட்டேன். ரயில் அவுட்டர் சென்றபின்னர் ரஜினி சார் வந்து கதவை தட்டினார். என்னம்மா இங்கே நீங்கள் ரொம்பவே பிரபலம் போல். காட் ப்ளஸ் யூ மா என்றார். அப்போது தான் எனக்கு மனசு நிம்மதியானது என்றார்.