ஐக்கிய அரபு அமீரகம் 10 வருடம் செல்லத்தக்க கோல்டன் விசாவை தொழிலதிபர்கள், முதலிட்டாளார்கள், பிரபலங்கள், விஞ்ஞானிகள், திறமைமிக்க மாணவர்கள் ஆகியோருக்கு வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகை மீனாவிற்கும் கோல்டன் விசாவை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கெளரவப்படுத்தியுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீனா,  “ எனக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்த ஐக்கிய ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி. எக்ஸ்போ 2020ல் இதைப் பெறும் முதல் இந்தியர் என்பதில் பெருமை.” என்று பதிவிட்டுள்ளார். 


 






 


கோல்டன் விசா  


கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வகையிலான பிரேத்யக விசா ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தங்களது நாட்டை விட்டு திறமைமிக்க சாதனையாளர்கள் சென்றுவிடக் கூடாது என்பதே இந்த விசாவின் நோக்கம். இந்த விசாவை 30,000 திர்ஹாமுக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களும் பெற முடியும். இந்த விசாவை பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.


அங்கு மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 34 சதவிகித்த்தினருக்கும் அதிகமானோர்  இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக, பிரபல நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பார்த்திபன், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பாடகி சித்ரா, நடிகை த்ரிஷா, அமலாபால், காஜல் அகர்வால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உட்பட பல பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை ஏற்கனவே பெற்றிருந்த நிலையில் அண்மையில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் இந்த விசா வழங்கப்பட்டது.