சினிமாவில் யாருடனும் அதிகமாக நட்பை பேணுவதில்லை என பிரபல நடிகை மஹிமா நம்பியார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழில் சமுத்திரகனி நடித்த சாட்டை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மஹிமா நம்பியார். அப்படத்தில் அவர் அதிக கவனம் பெற்றார். தொடர்ந்து என்னமோ நடக்குது, கொடி வீரன், குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், மொசக்குட்டி, புரியாத புதிர், அண்ணாதுரை, அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு, ஓ மை டாக், 800, சந்திரமுகி 2, ஐங்கரன், நாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளத்தில் காரியஸ்தன் படம் மூலம் 2010ல் அறிமுகமான மஹிமாவுக்கு கடந்த ஆண்டு வெளியான ஆர்டிஎக்ஸ் மற்றும் ஜெய் கணேஷ் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர். 






இந்நிலையில் அடுத்ததாக நடித்து வரும் லிட்டில் ஹார்ட்ஸ் பட நிகழ்ச்சியின் போது மஹிமா பேசிய வார்த்தைகள் அதிக கவனத்தை ரசிகர்களிடத்தில் பெற்றது. அதில், “ஒரு படத்தை தாண்டி யாருடனும் அதிக நட்பை பேணுவதில்லை” என கூறினார். மேலும் தேவையற்றவர்களுடன் நட்பு வைத்து கொள்ளாதீர்கள். இதில் ஆண், பெண் வித்தியாசமில்லை. இதனால் ஆண்களுக்கு நான் எதிரானவள் என நினைக்க வேண்டாம். சினிமாவில் இருப்பவர்களுடன் ஒரு படம் முடிந்தவுடன் தங்களது பணியை பார்க்க செல்லும் நிலை ஏற்படும் என்பதால் அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. 


நம்முடைய விஷயங்களில் நண்பர்களுக்கு இடம் கொடுத்து தேவையில்லாமல் ஏன் காயப்பட வேண்டும்?. அவர்கள் நம் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதால் நிம்மதி போய் விடுகிறது. என்னை நான் புரிந்துக் கொள்வதைப் போல, என்னை விட என்னை யாராலும் மகிழ்விக்க முடியாது. எனக்கு எது சரியானது என்பதை நான் தான் சொல்ல வேண்டும். எனக்கு எல்லாரையும் பிடிக்கும். ஆனால் ஒரு எல்லை உண்டு. நான் இப்படி பேசுவதால் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என நினைக்கலாம். திருமணம், குழந்தைகள் எல்லாம் அந்தந்த நேரத்துக்கு செய்ய வேண்டிய விஷயம் என மஹிமா நம்பியார் தெரிவித்துள்ளார்.